பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உலக நாடுகளில் தமிழர்

109


தமிழ்நாட்டு மரபுப்படியே வீட்டு விழாக்கள் பலவும் கொண்டாடப் பெறுகின்றன.

சிங்கப்பூரில் எந்த நேரத்திலும் தமிழ் ஒலிபரப்பும் வானொலி உண்டு. தமிழர்க்கென்றே தொலைக்காட்சியிலும் தனி ஒளிபரப்பு உண்டு. சிறிய தீவாயினும் தமிழ்ப் பாடம் அமைக்க, தொகுக்க, வெளியிட, தேர்வு அமைக்கவெனத் தனியாகத் தமிழறிஞர் சேர்ந்த குழு ஒன்று உள்ளது. பள்ளியிலும் கல்லூரிகளிலும் தமிழ் உண்டு. கோயில்கள் பலப்பல; ஒரு திருமால் (சீனிவாசர்) கோயிலில் நான் சென்ற நாளில்-கோடை வசந்த உற்சவத்தின் கடைசி நாளில் – ஐந்து நாநசுரம், தவில் கொண்டு இறைவன் திருவுலா அமைந்தது. ஆண்டாள் சிறந்த முறையில் தனிச்சன்னதி அமைத்துப் போற்றப் பெறுகின்றார். திருமால் கோயிலை ஒட்டியே சிவன் கோயில் அமைத்து இரண்டிற்கும் வேறுபாடு இல்லா ஒருமை உணர்வை ஊட்டுகின்றனர். தண்டபாணிக் கோயிலும் தனியாக உண்டு. விழாக் காலங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்றுகூடி வழிபடுகின்றனர். அங்கும் தமிழ், தமிழ்நாட்டைக்காட்டிலும் சிறக்க வாழ்கின்றது.

மற்றும் பிஜித் தீவு போன்றவற்றிற்கும் தென்ஆப்பிரிக்க மொரிஷியஸ் போன்ற இடங்களுக்கும் நான் செல்லாவிடினும் அங்கிருந்து வரும் தமிழர்களுடன் இங்கும் நான் சென்ற நாடுகளிலும் பேசிய நிலையிலிருந்து சில உண்மைகளை உணர்ந்து கொண்டேன். (இலங்கையைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல வேண்டுவதில்லை) சில இடங்களில் தமிழ் அருகி வருகிறது. சிலவிடங்களில் மறையவும் தொடங்கியுள்ளது. எனினும் தற்போது ஆங்காங்கே பலர் தமிழை வளர்க்க – மக்களிடம் பரப்ப முயல்கின்றனர். அவ்வந்நாட்டு அரசாங்கமும் ஒரளவு முயற்சிக்கு ஆதரவு தருகின்றது. ஆம்! தமிழக அரசினைக்காட்டிலும் சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/111&oldid=1358518" இலிருந்து மீள்விக்கப்பட்டது