பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

தமிழர் வாழ்வு


ஆயினும் அந்த அடக்கும்—அல்லது சில சமயம் உயிரே அடங்கிப் போகும் அந்த வேடிக்கையினைக் காண நூற்றுக்கணக்கில்—சிலவிடங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவர். மாடுகளின் கொம்புகளில் உள்ள சில காசுகளை எடுப்பதற்கு மட்டுமன்றித் தம் வீரத்தைக் காட்டவும் சிலர் முன் வருவர்.

சுற்று வேலியிட்டு, அந்த எல்லையைக் கடவாத வகையில் பல கொழுத்த அலங்கரித்த மாடுகளை விட்டு அக்காளைகளைப் பாய்ந்து அடக்க மனிதக் காளைகளையும் உள்ளே விடுவர். ஒரு சிலரே அவற்றொடு ஈடு கொடுத்து வெற்றி காண்பார்கள். சிலர் இந்த வினையில் உயிர் இழப்பதும் உண்டு; சிலர் படுகாயம் அடைவதும் உண்டு. சிலர் சிறுசிறு காயங்களுடன் தப்புவர். மாடுகளோ வேலையற்றுக் கொழுத்தவை. இவர்கள் தம் வாழ்வின் பல பணிகளுக்கு இடையில் இந்தப் பழக்கத்தையும் கொண்டவர். இரு நிலையில் எங்கே ஒருமை காண முடியும். ஆனால் கூடியுள்ள மக்களோ தம் மகிழ்ச்சிக்காக அவர்களைத் தூண்டிவிடுவர். மாடுகளுக்குரியவர்கள் அவற்றை உசுப்பி விடுவர். ஒரே மக்கள் ஆரவாரம்—கூச்சல்—குழப்பம்—வெடி—வேட்டு—பறை முதலிய சத்தங்கள்; இவற்றுக்கிடையில் மாடுகள் மேலும் மூர்க்கமாகி வருகிறவர்களைத் தாக்கும். சுற்றியிருக்கின்ற மக்களோ அவர்கள் வருத்தமறியாது மேலும் கூச்சலிடுவர்—ஆர்ப்பரிப்பர். மாட்டுச் சண்டை மும்மரமாகும். முடிவில் ஒரு சிலரே சில காயங்களுடன் வெற்றி எல்லையை எட்டுவர். மற்றவர் நிலை பற்றி நான் முன்னமே கூறிவிட்டேன்.

'சல்லிக்கட்டு' அல்லது 'மஞ்சு விரட்டு' என்ற பெயர் இதற்கு எப்படி வந்தது? 'சல்லிக்கட்டு' என்பது பிற்காலப் பெயர். இன்றும் கிராமங்களில் மாட்டுப் பொங்கலன்று மாடுகளை அலங்கரித்துக் கொம்பிலும் கழுத்திலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/12&oldid=1359145" இலிருந்து மீள்விக்கப்பட்டது