பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மஞ்சு விரட்டு

11


மணிகள் அணிவிப்பதோடு, தென்னை, பனை ஒலைகளால் (சல்லி சல்லியாகக் கிழித்து) அழகாகச் செய்யப் பெற்ற தொங்கும் சல்லிகளை அணிவித்து மகிழ்வார். அவ்வோலைச் சல்லிகள் பல வண்ணங்களால் ஆகியவை. மாடுகளுக்கு மட்டுமன்றி அவை தங்கும்தொழுவங்கள் முற்றிலும் இந்தத் தென்னை, பனைச் சல்லிகளைக் கட்டி அழகாகப் போற்றுவார்கள். அவற்றைக் கட்டி, அம் மாடுகளுக்குப் பொங்கலிட்டுப் படைப்பதாலேயே இந்த விழாவிற்குச் 'சல்லிக் கட்டு' என்ற பெயர் வந்தது. ஆயினும் இந்த அழகு—ஒப்பனை ஆகியவற்றிற்கும் காளைகள் போருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. ஆம்! அங்கே போருக்கு, நிறுத்தப்பெறும் காளைகளும் இவ்வாறும் இதற்கு மேலும் அழகு செய்யப்பெறும். ஆனால் போராட்டம் எங்கோ ஒரு சில இடங்களில்தான் நடக்கும்.

'மஞ்சி விரட்டு' என்பதே பழைய பெயர். 'மஞ்சு' என்பதற்கு அழகு, ஆபரணம், மேகம், பனி, வலிமை, இளமை போன்ற பொருள்களும் இன்னும் சில பொருள்களும் உள்ளன. 'மஞ்சு' என்பதை 'வலிமை' என்ற பொருளில் 'மஞ்சடங்கிய மார்பகம்' (கம்பர்—இராவணன் வதைப்படலம் 168) கம்பர் எடுத்தாண்டுள்ளார். இப்படி வலிமை, அழகு, மேகம் போன்ற பொருள்களில் பழங்காலப் புலவர்கள் இச்சொல்லை எடுத்தாண்டுள்ளனர். பிங்கலம், திவாகரம் போன்றவை இப்பொருள்கள் உள்ளமையைக் காட்டும். 'விரட்டல்' என்பது உந்துதல், செலுத்துதல், விரைவுபடுத்துதல் என்று பல பொருள்களில் வழங்கப்பெறும். எனவே 'மஞ்சு விரட்டல்' என்பது வலிமையை அல்லது இளமையை உந்துதல்—முடுக்குதல் என்று பொருள்படும். 'மைந்து' என வலிமையைக் குறிக்கும் சொல்லை இந்தத் தொடரில் 'மஞ்சு' என மருவி வந்தது எனக் கூறுவாருமுளர். எனினும், 'மஞ்சு' என்பது மேகத்தைக் குறிக்கும் பொருளிலேயே வழங்கப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/13&oldid=1358286" இலிருந்து மீள்விக்கப்பட்டது