பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

தமிழர் வாழ்வு


"கேட்டினும் உண்டோ ருறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்"
(குறள் 196)

என்ற குறளுக்கு இலக்கியம் எனவே,

"செல்வக் காலை நிற்பினும்

அல்லற் காலை கில்லலன் மன்னே"
(புறம் 215)

என்ற கோப்பெருஞ்சோழன் அடிகள் அமைகின்றன அல்லவா!

நட்பொடு புணர்ந்து இருந்தார் இருபெருவேந்தரைக் (குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவன், வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி) கண்டு மகிழ்ந்த காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் அவர் நட்பு சிறக்கவேண்டுமென,

"ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது

இன்றே போல்க நும்புணர்ச்சி"
(புறம் 58)

என வாழ்த்தினமை அறிகின்றோம். இதில் நட்பினை மாற்றும் ஏதில் மாக்களுக்கு எ ச் ச ரி க் கை யு ம் விட்டுள்ளனரன்றோ!

இனி, அரண்பற்றிப் பாடிய பல சங்கப்பாடல்கள் நம்முன் உள்ளன. இயற்கை அரண், செயற்கை அரண் முதலியன சுற்றிச் சூழ, நாடும் நகரும் நனி சிறந்தன எனக் காண்கிறோம்.

"வான்கண் அற்றவன் மலையே வானத்து
மீன்கண் அற்றதன் சுனையே, ஆங்கு
மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும்
புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்

தாளிற் கொள்ளலிர் வாளிற் றாரலன்"
(புறம் 109)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/122&oldid=1358347" இலிருந்து மீள்விக்கப்பட்டது