பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் . வள்ளுவரும் சங்க காலமும்

121


எ ன் று க பி லர் ப ற ம் பு நாட்டு மலைஅரணைக் காட்டுகின்றார்

"வாங்குவில் அரணம் அரணம் ஆக
(முல்லை-42)

என்று நப்பூதனார் வீரர்தம் அரணைக் குறிக்கின்றார். 'கடிஅரண்', 'முற்றரண்' எனப் பலவிடங்களில் அரண் பற்றிய குறிப்புக்கள் உள்ளமை காண்கின்றோம். இனி மாற்றார் தம் அரண்களைக் கடந்து அவர்தம் நாடுகள் கவின்கெடச் செய்த அரசர் வீரத்தினைப் புறப்பாடல்களில் மட்டுமன்றி அகப்பாடல்களிலும் நன்கு காண்கிறோம்.

"நண்ணார்

அரண்தலை மதிலராகவும் முரசுகொண்டு

ஓம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன்"
(நற்.—39)

என்ற நற்றிணை அடிகளும்,

"வானவரம்பன் அடல்முனைக் கலக்கிய
உடைமதில் ஓரரண் போல

அஞ்சுவரு நோயொடு துஞ்சா தோனே"
(அகம்-45)

என்ற அகப்பாட்டு அடிகளும் சான்றாக அமையும் என எண்ணுகிறேன்.

ஒரே குறட்பாவில் நின்று இதுவரை இத்துணைச் சான்றுகள் கண்டோம்; இந்தக் குறளில் வரும் ஆறும் அரசனுக்கும் அ ர சி ய லு க் கு ம் இன்றியமையாதவை ஆனமையின். இனி அரசியலொடு தொடர்புடைய பிறவற்றையும் காண்போம்.

இறைமாட்சிக்கு அடுத்துக் கல்வி, கல்லாமை, கேள்வி என்ற அதிகாரங்கள் அரசியலில் வருகின்றன. அரசர்களுக்குச் கல்வி இன்றியமையாதது என்ற அடிப்படையில் மட்டுமன்றி, நாட்டுக்கல்வி வளர்ச்சியில் முதலாவதாக

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/123&oldid=1358358" இலிருந்து மீள்விக்கப்பட்டது