பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

தமிழர் வாழ்வு


அரசன் கருத்திருத்த வேண்டும் என்ற உண்மையினையும் வள்ளுவர் இதன்வழியே உணர்த்துகிறார். நாடு நாடாக இலங்க வேண்டுமாயின், கல்வியும் அதன் வழி ஊறும் அ றி வும் இன்றியமையாதானவன்றோ? க ல் வி யி ன் இன்றியமையாமையைக் காட்டிய வள்ளுவர், அதை 'உடையார் முன் இல்லார்போல் ஏக்கற்றுக்' கற்க வேண்டிய வகையினை வற்புறுத்துவர். இதே கருத்தினை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்,

"உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே"
(புறம்-183)

என்ற வகையில் விளக்கி, அக் கல்வியால் உண்டாகும் சிறப்பினைப் பின்வரும் அடிகளால் விளக்கிக் காட்டுகிறார்.

"பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலான் தாயுமனந் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடை யோனாறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பா லொருவனும் அவன்கட் படுமே"
(புறம்-183)

நாடாளும் நல்லவர் எப்படித் 'துலாக்கோல்' ஒத்து நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டுமென்ற உண்மையினை வள்ளுவர் 'செங்கோன்மை' முதற் பாட்டிலேயே விளக்கிக் காட்டுகிறார்.

"ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை"
(குறள்-541)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/124&oldid=1358367" இலிருந்து மீள்விக்கப்பட்டது