பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் - வள்ளுவரும் சங்க காலமும்

123


என்பர் அவர். 'உயிரினும் சிறந்தார் கண்ணும் என்பார் யார் மாட்டும் என்று கூறினார்' என விளக்கம் தருகிறார் பரிமேலழகர். இக் கருத்தினைச் சங்கப் பாடல்கள் பல வலியுறுத்துகின்றன.

"வழிபடு வோரை வல் அறிதீயே
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே
நீமெய் கண்ட தீமை காணின்

ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி"
(புறம்-10)

என்ற ஊன்பொதி பசுங்குடையார் பாட்டும்,

"அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
அதனால் நமர்எனக் கோல்கோடாது

பிறர் எனக் குணங்கொல்லாது...வாழிய"
(புறம்-55)

என்ற மதுரை ம ரு த னி ள நா க னா ர் பாட்டும் வலியுறுத்துகின்றன. வல்லவோ? மேலும் பிறர் நோயினையும் தம் நோய் போல் ஒப்ப அறியும் திறனை,

"பிறர்நோயும் தம்நோய்போல் போற்றி அறனறிதல்

சான்றவர்க் கெல்லாம் கடன்"
(கலி-139)

என்ற கலிப்பாட்டும் நன்கு விளக்குகின்றதல்லவா? இன்னும் செங்கோன்மை தவறாத மன்னன் ஆளும் நாட்டில் பெயலும் விளையுளும் தொக்கு அமையும் என்ற உண்மையினையும், குடிதழீக் கோலோச்சும் மன்னவன் அடிநிற்கும் உலகம் என்ற உண்மையினையும் வள்ளுவர் காட்டும் வகையில் பல சங்கப் பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன.

"மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இய்ற்கை யல்லன செயற்கையில் தோன்றினும்

காவலர்ப் பழிக்குமிக் கண்ணகன் ஞாலம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/125&oldid=1358384" இலிருந்து மீள்விக்கப்பட்டது