பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

தமிழர் வாழ்வு



அதுநற் கறிந்தனை யாயின் நீயும்
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
பகடுபுறந் தருகர் பாரம் ஓம்பிக்
குடிபுறங் தருகுவை யாயின்நின்

அடிபுறக் தருகுவர் அடங்கா தோரே"
(புறம்-35)

என்ற வெள்ளைக்குடி நாகனார் பாடலின் அடிகளும் அப்பாடலின் பிற அடிகளும் அந்த இரு குறட்பாக்களின் கருத்துக்களை மட்டுமன்றி அரசியல் அதிகாரங்கள் பலவற்றில் அமைந்த கருத்துக்களையும் தொகுத்துரைக்கும் வகையில் அமைகின்றன. "அறம் புரிந்தன்ன செங்கோலும்", "குடிமறைக்கும் கொற்றக்குடையும்", "நாடா வளமுடைநாடும்", "நல்லரசும்" பிறவும் வெள்ளைக் குடி நாகனார் பாடலில் நன்கு காட்டப்பெறுகின்றன.

பெரியோரைத் துணைக்கோடலின் தேவையை—இன்றியமையாமையை வள்ளுவர் ஓர் அதிகாரத்தான் விளக்கி, மற்றுமொரு அதிகாரத்தால் சிற்றினம் சேரா நிலையையும் காட்டுகிறார். சங்க இலக்கியங்கள் பலவும் இவ்விரண்டினையும் சுட்டிக்காட்டுகின்றன.

"தொல்லாணை நல்லாசிரியர்
புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவின் நெடியோன் போல
வியப்பும் சால்பும் செம்மை சான்றோர்

பலர்வாய்ப் புகரறு சிறப்பிற் றோன்றிய"
(மதுரை 761-65)

நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடிய வரிகளில் பெரியாரைத் துணைக் கொண்ட அவன் குலச்சிறப்பு விளங்குகின்றதன்றோ? பாரி கபிலரையும், அதிகன் ஒளவையாரையும் அவ்வாறே பல மன்னர்கள் ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோரையும் துணையாகக் கொண்டு வாழ்ந்த வரலாற்று நிலை அறிந்த ஒன்றுதானே. அப்படியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/126&oldid=1358395" இலிருந்து மீள்விக்கப்பட்டது