பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவர் கால வரலாறு

133


கடைச்சங்க காலத்து இறுதி நிலையினையோ அன்றி மு டி ந் த நிலையினையோ ந ம க் கு விளக்குவனவே இரட்டைக் காப்பியங்கள். முடியுடை வேந்தர்கள் நிலைகெடும் காலமாக அது அமைந்துவிட்டது. சோழன் கரிகாற் பெருவளத்தானும் பா ண் டி ய ன் நெடுஞ்செழியனும் சிலப்பதிகார இறுதிக் காலத்திலே வரலாற்று வீரர்களாகிவிட்டனர். சே ர ன் செங்குட்டுவனே தமிழ்நாட்டுச் சிறந்த மன்னனாக விளங்கினான். அவன் காலம் வரையில் தமிழ்நாட்டு இலக்கிய மரபு, வாழ்க்கை நெறி, சமய மரபு முதலியன ஓரளவு முறை தவறாத வகையில்—அதிக மாறுபாடுகள் இ ல் லா த வகையில் இருந்தன. அவன் காலத்திலேயே தமிழ்நாட்டுக்கு முற்றும் புதியனவாகிய ச ம ய ங் க ளு ம் வா ழ் க் கை நெறிகளும் இடம் பெற்றுள்ளமையைக் காண்கின்றோம். அவன் காலத்துக்குப் பிறகே தமிழர் நாட்டு முடியுடை வேந்தர் மரபிலே மதிக்கக் கூடிய மன்னர் இலராயினர். ஆனால் அதே வேளையில் வடக்கில் சாதவாகனப் பேரரசும் அதைச் சார்ந்தும் தனித்தும் நின்ற பல சிற்றரசுகளும் தமிழ்நாட்டைத் தம் உரிமையாக்கிக் கொள்ள மறைமுகமாக முயன்று கொண்டிருந்தன. ஆந்திரரும் சாதவாகனரும் கங்கரும் வாகடகரும் களப்பிரரும் கடம்பரும் நாகரும் (Chutanagar) பிறரும் ஒருவர்பின் ஒருவராகத் தனித்தும் சேர்த்தும் கி. பி. 2, 3, 4-ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் எல்லையிலும் தமிழ்நாட்டிலும் தத்தம் கொள்கைகளையும் அவற்றையொட்டி ஆட்சியையும் புகுத்த நினைத்தனர். அப்படியே வடநாட்டுச் சமயத்தவர் பலரும் உள்ளே வந்தபோதிலும் அதுவரை ஆக்கம் செலுத்த முடியாதிருந்தமையின் உள்ளம் பொருமிக் கொண்டிருக்க, தடுக்க ஆளில்லாத காரணத்தால்—இக்காலத்தில் தாராளமாக நுழைந்தனர். அந்த அடிப்படையிலேதான் சமணமும் பெளத்தமும் வைதிகமும் பிற சமயங்களும் தமிழ்நாட்டில் புருந்தன. "ஒன்றே குலமும் ஒருவனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/135&oldid=1358557" இலிருந்து மீள்விக்கப்பட்டது