பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவர் கால வரலாறு

135


ஆம்! அக்காலத்தில் எல்லாம் தமிழ்ச் சமுதாயமும் அவர் தம் மன்னரும் மாற்றாரை விரட்டி ஒட்டி நிற்கும் நிலையில் வாழ்ந்துவந்தனர். எனினும் கி.பி. முதல் நூற்றாண்டு தொடங்கி இந்த நிலை மெல்ல மெல்லத் தளர, அந்நூற்றாண்டின் இறுதியில் தாயற்ற சேயெனத் தமிழ்நாடு நிலை தளர்ந்தது. இந்தக் காரணத்தாலேயே தமிழர் தம் பேரும் புகழும், சீரும் சிறப்பும், அறிவும் திறனும் பிற இயல்புகளும் கண்டு கருத்தழிந்த பலர் இந்நாட்டில் கால் வைத்தனர். அ வ் வா று வ ந் த வ ரு ள் பல்லவர் முக்கியமானவர்.

பல்லவர் வெளிநாட்டிலிருந்து வந்தவரே என்பதைப் பல பேரறிஞர்கள் முடிவு கட்டிக் கூறினார்கள் என்றாலும் ஒருசிலர் அவர்கள் தமிழ்நாட்டினரே என்று சாதிக்க நினைக்கின்றனர். இப் பல்லவரைப் பற்றி இன்றைக்குச் சுமார் ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளுக்கு முன் சகல்வெட்டு, சிற்பம், ஓவியம், கலைநலம், சமய நெறி, இலக்கியம் முதலியவற்றின் அடிப்படையில் ஆராய்ந்த நல்லறிஞர்கள் சிறந்த வகையில் ஆய்வு நடத்தியுள்ளார். ஆயினும் அதற்குப் பிறகு கடந்த அரை நூற்றாண்டில் ஆய்கின்றவர்கள் யாவரும் முன் ஆய்ந்தவர் கொண்ட முடிவுகளை வை த் து க் கொ ண் டு, சொல்வதையே சொல்லிக்கொள்ளும் வகையில் சில நூல்களை வெளியிட்டுள்ளனர். அக்கால ஆராய்ச்சி அறிஞர்களுள் திருவாளர்கள் வி. வெங்கையா, துப்ரெயில் துரை, சீனிவாச ஐயங்கார் டி. ஏ. கோபிநாத ராவ், ஏ. இ. லா ங் கு ஸ் டு ஹுல்ஸ் போ ன் றோ ர் முக்கியமானவர்கள்? பல்லவர்தம் செப்பேடுகளில் உள்ள எழுத்துக்கள் சில வடநாட்டு வேந்தர்களாகிய சதகர்ணி, புலுமாயி போன்றோர் தம் எழுத்துக்களை ஒத்துள்ளன என அ றி ஞ ர் க ள் எ டு த் து க் காட்டியுள்ளனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/137&oldid=1358582" இலிருந்து மீள்விக்கப்பட்டது