பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

தமிழர் வாழ்வு



பல்லவர் தமிழ்நாட்டவரே என்று காட்டுவார் பல்லவம் என்பது கொடி என்றும், கொடியால் சுற்றப் பட்டமையின் பல்லவர் குடியின் முதல்வன் அப்பெயர் பெற்றான் எனவும் காரணம் காட்டுவர். தொண்டைமான் இளந்திரையனே அவன் என்பர். பத்துப்பாட்டில் பெரும்பாணாற்றுப் படைத் தலைவனே – அத் தொண்டைமானே இக்குலத்தின் முதல்வன் என்பர். அத்துடன் ஒரு சிலர் அவன் சோழ மன்னனுக்கும் வழுக்கிய வேற்றுப் பெண்ணுக்கும் பிறந்து பட்டத்துக்கு வந்தவன் என்பர். இது எப்படிப் பொருந்தும் என எண்ணிப் பார்க்க வேண்டும். பெரும்பாணாற்றுப்படை போன்ற பேரிலக்கியத்தின் தலைவன் எப்படித் தமிழ் அறியாத ஒர் அரசர் குடிக்கு முதல்வனாக இருக்கமுடியும்?

தொண்டைமான் இளந்திரையனைப் பற்றி இவர்கள் கூறும் கதைக்கும் பல்லவர் மரபுக்கும் சம்பந்தமே இல்லை. சோழ மன்னன் பீலிவளை என்ற நாக கன்னிகையைத் தொண்டைநாட்டில் கண்டு கூடிப் பிரியும் காலத்தில் மகன் பிறந்தால் அனுப்புமாறும் அவனை அரசனாக்கி வைப்பதாகவும் வாக்களிக்க, அப்படியே நாகநாடு சென்ற பீலிவளை தான் பெற்ற மகனை உற்ற பருவத்தில் கலத்தில் சோழநாட்டுக்கு அனுப்பினாள்; கடலில் கொடுங் காற்றால் கலம் கவிழ, இளந்திரைகளுக்கிடையில் இளவரசன் கடலை நீந்திக் கரையை அடைந்தான்; அதுபோது கடற்பாசிக் கொடிகள் அவனைச் சுற்றி இருந்தமையால் அக்கொடிகளால் அவன் பல்லவன் ஆக்கப் பட்டான் என்றும் கூறுவர். (பல்லவம் தமிழ்ப் பெயரன்று) திரைகளால் தரப்பெற்றவனே தொண்டைமான் இளந்திரையன் என்பர். எனினும் அவனைப் பாடிய பெரும்பாணாற்றுப்படையாகிய பெரு நூல் இது பற்றி ஒன்றும் குறிக்கவில்லை. மேலும் அவன் சிறந்த தமிழ் மன்னன். கொடியைப் பல்லவமாக்கி அதிலிருந்து மரபை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/138&oldid=1358668" இலிருந்து மீள்விக்கப்பட்டது