பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

தமிழர் வாழ்வு


இடமாக அமையும் அதே வேளையில், கடற்கரையை அடுத்த நாகம்மைக் கோயில் இலங்கைவாழ் இந்துக்களுக்குச் சிறந்த தூய்மைநிறை தெய்வ இடமாக அமைகின்றது. இத்தீவும் இதை ஒட்டிய சில தீவுகளுமே நாக நாடு எனக் கொள்ளல் பொருந்தும். எனவே இந்நாட்டுப் பீலிவளைக்குப் பிறந்த திரையனை எக்காரணம் கொண்டும் பல்லவர் குலத் தலைவனாக்க முடியாது. நல்ல வேளை இவர்கள் ஆய்வு, 'அழகிய பல்லவர் ஆண்டதால் தான் அத்தீவு மணிபல்லவம் என்று பெயர் பெற்றுச் சிறந்தது' என்னும் அளவிற்குச் செல்லாதது அமைதி தருகின்றது.

ஆம்! முதற் பல்லவர் தமிழ் மரபுக்கு மாறுபட்டவர் என்பதற்கு அவர்தம் பிராகிருத மொழிக் கல்வெட்டுகளே சான்று பகரும். மேலும் அவர்களே தங்களைப் பரத்துவாஜ கோத்திரத்தவர் என்று கூறிக் கொள்கின்றனர். (Pallavas of Kanchi) இக்கோத்திரம் தமிழ் மரபுக்கு ஏற்றதன்று. பல்லவர் முதலில் பிராகிருதப் பல்லவராக இருந்து, பின் சமஸ்கிருதப் பல்லவராகிப் பின் ஏழாம் நூற்றாண்டில் அப்பர் அடிகளால் மாற்றம் பெற்ற பிறகே தமிழ்ப் பல்லவராகித் தம் கல்வெட்டுக்களைத் தமிழிற் பொறித்துள்ளனர். எனவே பல்லவர் தமிழ்நாட்டவர் என்று கொள்வதோ சோழனுக்கு முறையற்ற வழியில் பிறந்த பரம்பரையினர் என்று கொள்வதோ பொருந்தாது.

சிலர் 'பல்லவர் தொண்டையர்' எனத் திருமங்கை ஆழ்வார் போன்றார் பாடியதைக் கொண்டும் கொடிக்கு வடமொழிப் பெயர் பல்லவம் என்றிருப்பது கொண்டும் இநத் உண்மையை நிலைநாட்ட முயல்வர். தொண்டை நர்ட்டை ஆண்டதால் அவர்கள் தொண்டையர் எனவும் தொண்டையர் கோன் எனவும் அழைக்கப் பெற்றார்களேயன்றி வேறன்று. 'Emperor of India 'என்று ஆங்கில நாட்டு மன்னர் கூறப் பெற்றார் என்பதால் அவரை யாராவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/140&oldid=1358843" இலிருந்து மீள்விக்கப்பட்டது