பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

தமிழர் வாழ்வு


கொள்ள வேண்டி இருப்பதாலும் இக்கூற்றை அத்துணைப் பொருத்தமாகக் கொள்ள வழியில்லை. எனினும் அவர்கள் தமிழ்நாட்டில் வந்து சேர்ந்த வேற்று இனத்தவரே என்பதில் ஐயமில்லை.

பல்லவர் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. எனினும் அவர்கள் எப்போது காஞ்சிக்கு வந்தார்கள் என்பதைத் திட்டமாக வரையறுக்க முடியவில்லை. பல்லவர் வாழ்வின் இறுதி எல்லை, அபராஜிதரோடும் தமிழக வரலாற்றின் திருப்பு மையமான திருப்புறப்பியப் போரோடும் அறுதியிடக் கூடிய தெளிந்த நிலை காணப் பெறினும் அவர் தம் தொடக்க எல்லை திட்டமாக வரையறுக்க முடியாததாகவே உள்ளது. இதனாலேயே இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ முதல் நூற்றாண்டின் இறுதியிலோ வாழ்ந்த தொண்டைமான் இளந்திரையனை இவர்கள் முன்னோடியாகக் கொண்டு இடர்ப்படுகின்றனர். எனினும் இவர்களுடைய ஆய்வின்படி இவர்கள் வடக்கிருந்து வந்தவர் என்பதும், அவருள் முதலாவதாகக் காஞ்சியில் ஆண்டவன் பப்பதேவன் என்பதும், அம்மரபில் ஒருவனான விஷ்ணு கோபனே வடநாட்டுப் பெருவேந்தனாகிய சமுத்திரகுப்தனின் அலகாபாத் தூணில் குறிக்கப்பெற்றவன் என்பதும் தெளிவாக விளங்குகினறன. இந்த வழியில் நின்றே பல்லவர் காஞ்சியில் காலூன்றிய வரலாற்றைக் காண்போம்.

இப் பல்லலவர், சாதவாகனப் பேரரசின்கீழ் இருந்த காஞ்சியைச் சார்ந்த நாட்டினை அவர்களுக்குப் பிறகு கைப்பற்றி ஆளத்தொடங்கினர் என்று புதுவை துப்பரே அவர்கள் விளக்கியுள்ளார்கள். (History of the Institutions of Pallavas Ed. 1924–by. C. S. Subramani Iyer P. 6)

வேற்று நிலத்தவர் தமிழ் நாட்டில் அலையலையாகப் புக நேர்ந்த நாட்டு நிலையினையும் காலச் குழலையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/142&oldid=1358879" இலிருந்து மீள்விக்கப்பட்டது