பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

தமிழர் வாழ்வு


‘புல்லி’யின் மரபினரை வென்று, காடு கொன்று நாடாக்கிக் காடவர், காடுவெட்டி என்ற பட்டங்களைப் பெற்று, இறுதியாகக் காஞ்சியையும் பற்றி ஆளத்தொடங்கினர் எனக் கொள்ளல் வேண்டும். எனவேதான் இவர்தம் பிராகிருதக் கல்வெட்டுக்கள் நெல்லூர்ப் பகுதியிலும் பிற வடக்குப் பகுதிகளிலும் இருக்கின்றன என வரலாற்று அறிஞர்கள் காட்டுகின்றனர். இதனாலேயே பின் வந்த பல மன்னர் – பல்லவரும் மற்றவரும் – கல்வெட்டுகளில் காஞ்சியைப் ‘பல்லவேந்திரபுரி’ எனக் குறித்துள்ளனர். ஏறக்குறைய இந்தக் காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் முதற் பகுதியாக இருக்கலாம் எனக் கொள்ளுவதில் தவறில்லை. தொண்டைமான் இளந்திரையனுக்கு ஒரு நூற்றாண்டுக்குப் பின் களப்பிரர் முதலியோர் ஒடுங்கிய இந்த நாளிலே பல்லவர் காஞ்சியுள் புகுந்தனர் என்று. கொள்ளல் பொருந்துவதாகும். (Meenakshi P. 2)

இந்த முதற் பல்லவனைப் பற்றி கே. வி. சுப்பிரமணிய ஐயர் அவர்கள் தமது ‘பழந்தக்கணத்தில் வரலாற்றுக் காட்சிகள்’ (“Historical Sketches of Dekkan என்ற நூலின் இரண்டாம் பகுதியில் (அவர் மகனாரால் அண்மையில் வெளியிடப்பெற்றது) இரண்டாம் பல்லவர்தம் மரபின் தோற்றத்தைக் குறிக்கும்போது தெளிவாகக் காட்டியுள்ளமை ஈண்டு எண்ணத்தக்கது.

இந்த விளக்கத்தின்வழி பல்லவர் யார் என்ற உண்மை திட்டமாகத் தெளிவு பெற்றுவிட்டது. மேலும் இவரது நூலின் முதற் பகுதியிலேயே (1971-இல் வெளியிடப் பெற்றது) பல்லவர் வடக்குத் திசையில் யார் யாருடன் எவ்வெவ்வாறு இணைந்தும் பிணக்குற்றும் வேறுபட்டும் மாறுபட்டும் மெல்லத் தெற்கு நோக்கி வந்தனர் என்பதை விளக்கியும், அவர்தம் சமயம், மொழி முதலியவற்றைப் பற்றித் தொட்டும் காட்டியுள்ளார். (Sec. Il Pallavas from P. 15) அவர்தம் எழுத்து மத்திய இந்திய எழுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/144&oldid=1359037" இலிருந்து மீள்விக்கப்பட்டது