பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவர்கால வரலாறு

147


வழி எத்தனையோ வகையில் அரசர் வரிசையைக் காட்டும் நிலையினையும் நம்மால் உணர முடிகின்றது. மேலும் இவற்றால் இவர்கள் தம் மரபினைப் பிரமதேவனிடத்திலிருந்து வந்ததாகக் கூறிக் கொள்வதனையும் அறிகிறோம். அந்த மரபில் பல்லவன் என்ற பெயருடனேயே ஒரு மன்னவன் இருந்ததாகவும் காண்கின்றோம். (Vayalur List-Ep, Ind. Vol XVIII P. 151)

இம் மரபில் குமாரவிஷ்ணு I & II, ஸ்கந்தவர்மன் I & II, விஷ்ணுகோபன் (அலகாபத்துக் கல்வெட்டில் உள்ளவன் அல்லன்) சிம்மவர்மன், நந்திவர்மன் போன்றோர் முக்கியமானவனர்களாகின்றனர். இவர்களுக்கு இடையில் ஓர் இடைவெளி இருந்து சோழர் தலை துக்கினார்களோ என்ற ஐயமுமு் எழ இடமுண்டு. (Ancient History of Nellore By Venkiah-Goplan Pallavas pp. 63 & 64). இக்கருத்தைச் சிலர் மறுக்க நினைத்தாலும் இதிலும் நியாயம் உண்டு என்று கொள்ள நம் தமிழக நிலை இடங்கொடுக்கின்றது. 'எண்தோள் முக்கண் ஈசற்கு எழில்: மாடம் எழுபது செய்தோன்' என்று ஆழ்வாரால் போற்றப் பெறுபவனும் புராண வரலாற்றில் ஏற்றங் கொண்டவனுமாகிய கோச்செங்கணான் என்னும் கோச்செங்கட் சோழ நாயனார் இக்காலத்தில் வாழ்ந்தவராதல் வேண்டும். இவர் திருவானைக்காவில் இறைவனை வழிபட்ட தவத்தால் மன்னனாக, அவ்விறைவனுக்குத் தமிழ்நாட்டில் பெருங்கோயில் எடுத்தவன் என நாட்டுச் சமய வரலாறு கூறும் பெரிய புராணம் காட்டுகிறது. அவன் காலத்தில் எழுந்த கோயில்களையும் அவற்றை ஒட்டி எ ழு த் த பிற கோ யி ல் க ளை யு ம் பின் மகேந்திரன், நரசிங்கன் காலத்தில் வாழ்ந்த அப்பரும் சம்பந்தரும் வைணவ ஆழ்வார் ஆகிய திருமங்கையாழ்வாரும் பாடிப் பரவியுள்ளனர். காஞ்சியை உள்ளிட்ட பரந்த தமிழ்நாட்டில் அவன் இத்துணை விரிவாகச் சமயப்பணி செய்தான் என்றால் அது வேற்றுச் சமயத்தைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/149&oldid=1359050" இலிருந்து மீள்விக்கப்பட்டது