பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

தமிழர் வாழ்வு


சார்ந்த பல்லவர் ஆட்சியில் இருந்திருக்க முடியாது. திரு. வெங்கையா அவர்கள் குறிப்பிடுவது போன்று, ஓரிரு தலைமுறைகள் பல்லவர் காஞ்சியை விட்டு, நெல்லூரில் தம் கா லூ ன் றி இருந்த நாளிலேதான் சோழன் கோச்செங்கணான் சைவ, வைணவப்பெருங்கோயில்களைக் கட்டி முடித்திருக்க வேண்டும். பல்லவர் பலம் இல்லையாகவே அவரது சமயத்தைச் சார்ந்தோறும் தடுக்க முடியாத நிலையில் தளர்ந்திருப்பர்.

எனினும் மறுபடியும் அப் பல்லவர் கை மேலோங்கிய காலத்தில் புதிதாக எழுந்த பெருங்கோயில்களைக் கண்ட சமணர்களும் அவர்கள் வழிநின்ற ஆறாம் நூற்றாண்டின் பல்லவ மன்னர்களும் நாட்டு மக்கள் நிலையறிந்து அவற்றைத் தகர்க்க முடியாதுபோக, அதற்கு மாறாகத் தம் சமயக் கோயில்களையும் மடங்களையும் ஊரெங்கும் கட்டிச் சமணத்தை வளர்த்தனர். இந்தப் போராட்டத்தின் இறுதிக் கட்டமே அப்பர் சம்பந்தர் வரலாற்றில் விளக்கப் பெறுவது. எனவே சமஸ்கிருதப் பல்லவர் காலத்தில் சில காலம் அவர்கள் தமிழ்நாட்டு எல்லைக்கு அப்பால் சென்றிருந்தார்கள் எனவும் அக்காலத்தில் கோச்செங்கணானும் ஓரிரு சோழரும் ஆண்டிருக்கக் கூடும் எனவும் கொள்வதே பொருத்தமானதாகும். எனவே வெங்கையாவின் கூற்றை மறுக்கும் திரு கோபாலனின் ஆய்வும் (pp. 64, 65) இடையில் சோழர் ஆட்சி இருந்திருக்க முடியாது என்று காட்டும் முடிவும் பரிசீலனைக்கு உரியனவேயாம்.

இவ்வளவு தெளிவற்ற நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகே மகேந்திரவர்மன் கி.பி.600 இல் காஞ்சியில் பல்லவப் பெருமன்னனாக அரியணை அமர்ந்தான். அவன் காலந் தொட்டு அபராஜிதன் காலம் வரை (கி.பி.850) சுமார் இரண்டரை நூற்றாண்டுக் காலத்தில் தமிழக வரலாறு பல்லவர் ஆட்சியில் தெளிந்த நீரோடையாகப் புதுமைபூத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/150&oldid=1359073" இலிருந்து மீள்விக்கப்பட்டது