பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவர்கால வரலாறு

149


சோலையாகக் காட்சி அளிப்பதைக் காண்கின்றோம். அக்காலத்தில் நாட்டில் வாழ்ந்த பல்லவப் பேரரசுகளைப் பற்றி ஆய்வதினும் அக்காலத்தில் நாட்டில் ஏற்பட்ட மாறுதல்களையே காண முடிகின்றது. கடைச் சங்க காலத்தில் தெளிந்த தமிழகத்தைக் கண்ட நமக்கு ஏழாம் நூற்றாண்டில் காணும் பல மாறுதல்களுக்குட்பட்ட தமிழகத்தை நினைக்கும்போது அந்த இடைப்பட்ட - இரு பல்லவர் ஆட்சிக்கிடையில் தமிழகம் பெற்ற மாறுதல்களை எண்ணாதிருக்க முடியுமா? எனவே இந்த மாறுதல்களைச் சிறிது கண்டு மேலே செல்வோம். தமிழ்நாட்டு மரபுக்கு முற்றும் மாறுபட்ட மன்னர் பரம்பரைகள் ஆள, முற்றிலும் மாறுபட்ட சமய நெறிகளும், வாழ்க்கை முறைகளும் பெரு வ ழ க் கா க மக்களிடையில் புக, நாடே ஏ ழா ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதிய நாடெனுமாறு காட்சியளித்தது.

ஆட்சி முறையில் மாற்றம் பெரும்பான்மையாகக் காண முடியவில்லை. ஒரே பரம்பரையில் தந்தைக்குப் பின் மகன் என்ற மரபு காக்கப்பெறுகிறது. சங்க காலக் கரிகாலன் போன்று பல்லவ மல்லன் மக்கள் விருப்பப்படி அரசனாகும் மரபும் காணப்பெறுகின்றது. அரசர்களுக்கு இருந்த அமைச்சர் குழு முதலிய ஐம்பேராயமும் பிற சூழல்களும் பெரும்பாலும் மாற்றம் பெறாமலிருந்ததையும் காண்கின்றோம். அரசருடன் அரசியரும் அரசியலில், கலந்து பணி புரிவதையும் காண முடிகிறது. எனினும் பல்லவர் காலத்தில் சமயம் அரசியலில் பங்கு கொள்வதைக் காண முடிகிறது. சங்கால மன்னர்கள் சமயச் சார்புடையவர்களே ஆயினும் அ ர சி ய லி ல் அச்சமயத்தினைப் புகுத்தாது, 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்ற உணர்வில் அனைவரும் ஒன்றிக் கலந்து வாழ்ந்துவந்த மரபினை காண முடிகிறது. ஆனால் பல்லவர் காலத்திலோ சமயமே முக்கிய இடம் வகிக்க, அரசியல் அச்சமயத் தலைவர்களை ஒட்டியே நடை பெற்றதாகக் காண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/151&oldid=1359075" இலிருந்து மீள்விக்கப்பட்டது