பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

தமிழர் வாழ்வு


முடிகிறது. மகேந்திரன் காலத்தில் காணும் இப்பெரு மாற்றத்துக்குக் காரணம் இடைப்பட்ட நூற்றாண்டுகளின் மாறுதல்களே ஆகும்.

சங்க கால இறுதியிலேயே சமணமும் பெளத்தமும் தமிழ் நாட்டில் கால்கொண்டு மாற்றுக் கருத்துக்களை வளர்த்தன என்பதைக் காப்பியங்கள்வழி அறிய முடிகின்றது. அசோகர் காலத்திலேயே பெளத்தமும் இலங்கை வரையில் சென்று அங்கே பெரும் சமயமாக விளங்கியதாயினும், தமிழக மக்களிடை அது கால்கொள்ளவில்லை. சைவ வைணவர் சமய நெறிகளையும் கடவுளரையும் காட்டும் வகையில் எந்தச் சங்க இலக்கியங்களும் வேற்றுச் சமயங்களைச் சுட்டவில்லை. சமணம் முதன்முதல் சிலம்பிலும் பெளத்தம் முதன்முதல் மணிமேகலையிலும் பேசப்பெறுகின்றன. எனினும் அடுத்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் அவை இரண்டும் தமிழ் நாட்டுக்கே உரிய சைவ வைணவ சமயங்களிலும் மேம்பட்டு நின்று, அ க் கா ல அரசியல் துணை கொண்டு ஓங்கி, தமக்குள்ளேயே மாறுபட்டும், போரிட்டும் இறுதியில் பெள த் த ம் நிலை கெட, 7-ஆம் நூற்றாண்டில் சமணமே மேலோங்கி நின்றதைக் காண முடிகிறது. இந்த மாற்றுச் சமயப் போராட்டங்களுக்கு இடையில்தான் சைவமும் வைணவமும் கூடத் தமக்கே அதுவரையில் இல்லா வகையில் பல சடங்குகளையும் அவற்றை வளர்க்கக் கோயில்களையும் விரிவு படுத்திக்கொண்டன. எனவேதான் அந்த அடிப்படையில் சமய இலக்கியங்கள் தனியாக வளர ஆரம்பித்தன. சங்க இலக்கியத்தில் திருமுருகாற்றுப்படையும் பரிபாடலில் சிலவும் தவிர்த்து வேறெங்கும் இறைவனை முன்னிறுத்திப் பாடிப் பரிசில் வேண்டும் நிலை காண முடியாததன்றோ? ஆற்றுப்படையும் பரிபாடலும்கூடக் காலத்தால் சற்று பிந்தியவை என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.{{Nop}}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/152&oldid=1359072" இலிருந்து மீள்விக்கப்பட்டது