பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவர்கால வரலாறு

151


எனவே கடமையில் கருத்திருத்திக் கடவுள் உணர்வை நெஞ்சில் நிறுத்தி, தூய உள்ளத்தால் மக்கள் தொண்டாற்றிய தமிழகச் சமய நெறி, இந்தப் பல்லவர் காலத்திலே பல வகையில் மாற்றம் பெற்று வெறும் புறக்கோலங்களும் புகழுரையுமே சமயம் என்ற நிலையில் மாற்றம் பெற்றுள்ளது. இந்தச் சமயப் போராட்டத்துக்கு அடிப்படைக் காரணம் பிற சமயச் சார்புடைய பிற நாட்டு அரசர்களும் அவர்களுடன் ஆணையில் பங்கு கொண்ட பிற சமயத் தலைவர்களுமேயாவர். நாம் இவை பற்றி நன்கு அறிய முடியாவிட்டாலும் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாம் காணும் நாட்டு நிலை இதை நன்கு உணர்த்துகின்றதன்றோ?

பல்லவர் காலத்திய சமயம் பற்றிய கருத்தரங்கே இன்று தனியாக நடைபெற்றதால் நாம் நம் வரலாற்றுப் பகுதியில் அதிகம் ஆராயாது இந்த அளவோடு அமைந்து மேலே செல்வோம்.

மொழியிலேயும்கூட இந்தப் பல்லவர் காலம் பெரு மாற்றத்தைச் செய்துள்ளது. பல்லவர் கல்வெட்டுக்களே இதற்குச் சான்று ப க ரு ம். த மி ழ் நாட்டையும் அதனைச் சார்ந்த எல்லைப் பகுதிகளையும் ஆண்ட பல்லவர்கள் தமிழிலன்றிப் பிராகிருதத்திலும் ச ம ஸ் கி ரு த த் தி லும் கல்வெட்டுக்களைப் பொறித்தார்கள் என்றால் அந்த ஆட்சியில் எப்படித் தமிழ் மொழி வளர்ந்திருக்க முடியும்? எனினும் பொதுமக்களும் தமிழகத்தின் சமயங்களாகிய சைவவைணவச் சார்புடைய மக்களும் தமிழ்மொழியைப் பலவகையில் போற்றிக் காத்தனர். அக் காலத்தில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார், திருமூலர் போன்ற சமயத் தலைவர்களும் பதினெண்கீழ்க் கணக்கில் உள்ள சில நூல்களின் ஆசிரியர்களும் தமிழ் இலக்கியங்களையும் சமய இலக்கியங்களையும் போற்றி வளர்த்தனர். எனினும் அவர்களும் காலச் சூழலிலும் பிற சமயக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/153&oldid=1358943" இலிருந்து மீள்விக்கப்பட்டது