பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மஞ்சு விரட்டு

13


அவற்றுள் காடும் காடுசார்ந்த இடமும், முல்லை நிலம் எனப் பெயர்பெற்றன. அதில் ஆயர் குல மக்கள் சிறக்க வாழ்ந்துவந்தனர். ஆயர்குலப் பெருமையைச் சிலப்பதிகாரம் நமக்கு நன்கு எடுத்துக்காட்டும். அந்த முல்லை நிலத்துக்கு உரிய காலத்தைத் தொல்காப்பியர் இலக்கண முறையில் காட்டுகிறார். 'காரும் மாலையும் முல்லைக்கு உரிய' (அகத். 6) என்பது சூத்திரம், எனவே அந்த நிலத்தில் மேகங்கள் மழைபெய்யும் கார் காலமும் அதிலும் சிறப்பாக மாலைப் பொழுதும் முக்கியமாகக் கருதப்பெற்றன. மஞ்சு என்பதற்கு மேகம், அழகு என்ற பொருள்கள் உள்ளமையின் அந்த மேகங்கள் சூழ்ந்த கார் காலத்திய அழகிய மாலைப் பொழுதிலே நடைபெறும் இந்த விழாவிற்கு 'மஞ்சு விரட்டு' என்று அன்றைய தமிழர் பெயரிட்டனர். அந்தக் காலத்தில் பிரிந்தவர்கள் கூடவேண்டும் என்பதும் இல்லிருக்கும் தலைவி தலைவர் வரவு நோக்கி வாட, நல்ல சகுனங்களின் அடிப்படையில் தலைவர் வருவார்—வந்தார் எனத் தோழிகள் தலைவியைத் தேற்றுவதும் உண்டு என்பதைப் பத்துப்பாட்டின் முல்லைப் பாட்டைப் பயில்வார் நன்கு அறிவார்கள்.

இந்த அகத்திணையாகிய முல்லைக்குப்புறனாக வஞ்சித் திணை அமைகிறது. 'வஞ்சி தானே முல்லையது புறனே' (புறத்திணை . 6) என்பது தொல்காப்பியம். இதற்கு உரை எழுத வந்த நச்சினார்க்கினியர் 'முதலெனப் பட்ட காடுறை உலகமும் கார் காலமும் அந்நிலத்திற்கு ஏற்ற கருப்பொருள்களும் உரிப் பொருளும் ஒப்பச்சேறலின் வஞ்சி முல்லைக்குப் புறனாயிற்று' என்பர். எனவே புறம் காட்டும் நிலையிலும் அந்தக் காட்டு நிலம்-கார்காலம். மாலைப் பொழுது அவர் மனத்தை விட்டு அகலவில்லை. ஆம்! அந்த முல்லை நிலத்து ஆயர்களால், மேகங்கள் தவழும் கார்காலத்து மாலைப் பொழுதில் கொண்டாடப் பெற்ற விழாவே இந்த 'மஞ்சு விரட்டு'. இன்று இந்த விழா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/15&oldid=1423893" இலிருந்து மீள்விக்கப்பட்டது