பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவர்கால வரலாறு

153


ஆழ்ந்த சமயப்பற்றுள்ள சேக்கிழாரும் 'அர்ச்சனை பாட்டே யாகும்; ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக' என்று இறைவனே சுந்தரருக்குக் கட்டளை இட்டதாகப் பாடுவர். அப்பரும் 'தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்' என்று பாடுகிறார் எனினும் இந்தப் போராட்டம் இன்றும் தீரவில்லை. இந்த மொழிப் போராட்டம் தீர்ந்தாலன்றி-தமிழ்நாட்டில் வாழ்வார் தம்மைத் தமிழராகக் கொண்டு, தமிழே சிறந்த மொழி எனக் காட்டி இணைந்து வாழ்ந்தாலன்றி உய்வு இல்லை.

இவைமட்டுமன்றிச் சமுதாயத்திலும் எத்தனையோ மாறாட்டங்கள் இப் பல்லவர் காலத்தில் நிகழ்ந்திருப்பதை நம்மால் காண மு டி கி ன் ற து. ம க் க ள் உடல் உழைப்பும் கடமையும் உள்ளவராகத் 'தனக்கென வாழாப் பிறர்க்குரியாளராக' வாழ்வதுதான் மெய்ம்மை வாழ்வு என்றிருந்த நிலை மாறி, வெறும் ஆரவாரமும் மாற்று நிலைகளும் பெருக அவற்றின் துணை கொண்டு சோம்பி வாழும் வாழ்வினை மேற்கொண்டு விட்டார்கள் என்றுணர முடிகிறது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவன் வாக்குக்கு ஏற்ப வாழ்ந்த சமுதாயத்தில் சாதிகளும் பிற வேறுபாடுகளும் ஆட்சி புரியலாயின. "செய்தொழில் வேற்றுமை யான்" நின்ற வேறுபாடு மாறி, பிறப்பால் வேறுபாடு காட்டும் காலமாக மாறிய நிலையைப் பார்க்கின்றோம். சுந்தரர் காலத்தே 'அந்தணர் வேறோர் அந்தணர்க் கடிமை யாதல் இல்லை" என்று வழக்காடும் அளவுக்கு ஒரு சாதிக்கு ஒரு நீதி என்ற கொள்கை இந்த முதற் பல்லவர் காலத்தில் வளர்ந்ததுதான். அதனாலே தான் சேக்கிழார் பாடும்போதுகூட, தமது பெரிய புராணத் தலைவர்களைச் சாதிகள் குறித்துக் காட்டுகின்றார். அத்துடன் அவ்வச் சாதிக்கு இன்னின்ன தொழில்கள் என்ற ஒரு கட்டுப்பாடும் உண்டாகி இருப்பதறிகிறோம். எனினும் இந்தச் சாதி வேற்றுமை கற்றார்

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/155&oldid=1358967" இலிருந்து மீள்விக்கப்பட்டது