பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவர்கால வரலாறு

161


உத்திரமேரூர் ஏரி வற்றியபோது வண்டலை வாரியும், வற்றாதபோதும் படகுகள் கொண்டு வண்டலை வாரியும் அதனைக் கரையில் இட்டுக் கரையைப் பலப்படுத்திய நந்திவர்மன் இன்றைய 'P.W. D.' துறைக்கு வழிகாட்டியாவான் (Historical Sketches of Ancient Dekhan Vol. II P. 14)

இவ்வாறு வளம்படுத்திய பகுதிகளில் சிலவற்றை அக்கால வைதிக நெறிக்கேற்பப் பல்லவ மன்னர்கள் பிரமதேயமாகவும் தேவதானமாகவும் பிராமணர்களுக்கும் கோயில்களுக்கும் அளித்தனர் எனக் காண்கிறோம். இவர்கள் காட்டிய வ ழி யி லே தா ன் பிற்காலத்திய சோழர்கள் பெருமளவில் தானங்களைச் செய்து அவற்றை வரியிலா நிலங்களாக்கினர். மக்களினத்துள் வேறுபாடு வளர்க்கும் இந்த முறை, சமுதாய வாழ்வில் காலத்தால், மறைக்கப்படும் என்ற வரலாற்று உண்மைக்கு ஏற்ப இக்காலத்தில் முற்றும் நீக்கப்பெற்று, வேறுபாடற்ற நிலையில் அவை இ ன் று மக்களிடையில் வழங்கப் பெறுவதைக் காண்கிறோம்.

பல்லவர் காலத்தில் நாணயங்கள் புழக்கத்தில் இருந்தமை அறிகிறோம். அப்படியே அளவைகளுக்கும்—முகத்தல், நிறுத்தல் அ ள வை க ளு க் கு ம் பல்வேறு வரையறைகள் இருந்தன எனக் காண்கிறோம். இவையாவும் நாட்டுக்குப் புதியன அல்லவேனும் ஓரளவு இடைக் காலத்தில் சிதைந்த நிலையில் இவர்களால் செப்பம் செய்யப்பெற்றனவெனக் கொள்ளலாம்.

பல்லவர் ஆட்சிமுறையைப் பற்றியும் நீதி வழங்கிய நெறி பற்றியும் நாட்டுப் பிரிவுகளைப் பற்றியும்கூடப் பல அறிஞர்கள், கிடைத்த சான்றுகளைக் கொண்டு நன்கு ஆய்ந்துள்ளனர். அவற்றின்வழிப் பல்லவர் நாட்டைச் செம்மையாகப் பகுத்தும் நேரிய வழியில் நீதி வழங்கியும் மக்கள் வாழ்வின் அடிப்படை உணர்ந்தும் செயலாற்றினார்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/163&oldid=1358677" இலிருந்து மீள்விக்கப்பட்டது