பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

தமிழர் வாழ்வு


கள் என அறிய முடிகிறது. நாட்டைப் பல கோட்டங்களாப் பிரித்துப் பெரும்பாலான அதிகாரங்களை அம்மக்களிடமே விட்ட பெருமை பல்லவர்களுடையதே. இன்றைய மாநிலச் சுயாட்சிக் கோரிக்கையை மறுப்பவர்க்கு இப் பல்லவர் கால ஆட்சி வரலாறு ஒரு சிறந்த பாடமாக அமையும் என நம்புகிறேன்.

வெற்றி பெற்ற பெருமன்னர்கள் தத்தம் பெயரால் மண்டலங்களையும், ஊர்களையும், நாடுகளையும்—ஏன்—ஏரிகளையும் அமைத்தமை எண்ணிப்பார்க்க வேண்டிய ஒன்றாகும். இன்றும் இந்தக் கொடு நோய் ஆள்வார் யாராயினும் அவர்களை விடவில்லை. இடைக் காலத்திலும் பெ ரு ம ன் ன ர் க ள் ஆகிய இராசேந்திரன் போன்றாரையும் இந்நோய் பற்றியமை அறிகிறோம். ஆயினும் வரலாறு அது தவறு என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இப் பல்லவர் அன்று வைத்த பெயர்கள் எல்லாம் இன்று எங்கே உள்ளன? பல பெயர்களே இன்றி மறைந்தன. சில சிதைந்து நிலைகெட்டன. மாமல்லபுரமும், திரையன் ஏரியும் மகாபலிபுரம் எனவும் தென்னேரி எனவும் வழங்கப்படுதல் இதற்குச் சான்றாகும். அப்படியே நாடுகளுக்கு அவர்கள் வைத்த பெயர்கள் மாறி இயற்பெயர்களே நி லை த் த மை காண்கிறோம். பிற்காலத்தில் புகழுக்காக உண்டான கங்கைகொண்ட சோழபுரம் நிலைகெட, தொண்டால் அமைந்த தஞ்சையும் பெரிய கோயிலும் இன்றளவும் புகழ் பெற்று வாழ்கின்றன அ ல் ல வா? அ ண் மை யி ல் டால்மியாபுரம் கல்லக்குடியாக மாறிய கதையும், அத்தகையதே. யாரும் தங்கள் பெயரால் எதையும் அமைக்க ஒருப்பட மாட்டார்கள். பேரும் புகழும் பெற்று வரலாற்றில் வாழ்கின்ற அத்தனை பெருமக்களும் தம்மை மறந்து தம் நாமம் கெட்டுப் பணியாற்றியவர்கள் என்பதையும் உணரவேண்டும். இவ்வுணர்வைப் பல்லவர் காலத்திய வரலாறு நமக்கு ஊட்டும் என நம்புகிறேன்.{{Nop}}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/164&oldid=1358710" இலிருந்து மீள்விக்கப்பட்டது