பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவர்கால வரலாறு

163


பல்லவர் மக்கள் வாழ்வின் அடிப்படையான கல்வியை ஓம்பத் தவறவில்லை. 'கல்வியே கரையில்லாத காஞ்சி மாநகர்' என்று அக்காலத்தில் வாழ்ந்த அப்பராலேயே காஞ்சியும் கல்வியும் இணைந்து போற்றப்பட்டமை அறிகிறோம். அக்காலத்திய காஞ்சியில் கற்ற அறிஞர் பலர் வடநாட்டில் நெடுந்தொலைவில் இருந்த நாளந்தாப் பல்கலைக் கழகம் போன்ற இடங்களில் முக்கியப் பொறுப்பேற்றுச் சிறந்த அறிவியல் விற்பன்னர்களாக இருந்ததைக் காண முடிகிறது. மேலும் அக்காலத்தில் காஞ்சிபுரம் வந்த சீன யாத்திரிகராகிய யுவான்-சுவாங் இக் கல்விசேர் காஞ்சியைப் பாராட்டிய நிலையும் எண்ணத்தக்கதாகும். எனவே மக்கள் வாழ்வின் கண் எனப் போற்றும் கல்வியைப் பிற்காலப் பல்லவர் நன்கு போற்றிப் புரந்தனர் என அறியலாம். அப்படியே மக்களை நோயணுகா வகையிலும், அணுகின் தீர்க்கும் நெறியிலும் பல நல்ல ஏற்பாடுகளைச் செய்து மக்கள் நலம் போற்றியும் பல்லவர் திறம்பட ஆண்டனர் எனக் காண்கிறோம்.

இத்துணை வகையில் உள்நாட்டில் அமைதி காத்த அதே வேளையில் புறப்பகைகளுக்கு அஞ்சாது அவர்களைப் புறமுதுகிடக் செய்த பெருமையும் பல்லவரைச் சார்ந்ததாகும். பெருமன்னன் ஆகிய ஹர்ஷனைத் தோற்கடித்த, சாளுக்கிய மன்னனாகிய புலிகேசியைத் தோற்கடித்ததோடு, அவன் தலைநகரைக் கைப்பற்றிய பெருமை நரசிம்மவர்மனையும் அவன் படைத்தலைவராகிய பரஞ்சோதியாரையும் சார்ந்ததன்றோ? பல்லவ மன்னருள் போரற்று அமைதியில் வாழ்ந்தவர் ஓரிருவரே உள்ளனர் எனலாம். எனவே அவர்கள் ஆண்ட காலத்தில் எல்லாம் புறப் பகைகளாகிய மாற்றாரைப் புறங் கொடுத்தோடச் செய்ததோடு, நாட்டு அகப் பகைகளாகிய அறியாமை பிணி வறுமை முதலியவற்றைப் போக்கிப் பல்லவர் செம்மையை நாட்டில் நிலை நாட்டினர் எனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/165&oldid=1358709" இலிருந்து மீள்விக்கப்பட்டது