பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

தமிழர் வாழ்வு


கொள்ளலாம். அதனாலேயே ஆயிரமாயிரம் ஆண்டுகள் கழித்தும் அவர்தம் புகழ் ஓங்கி உயர்கின்றது. தம் ஆணையின் கீழ்ப்பட்ட மக்களின் கருத்தையும் நெறியையும் மொழியையும் பண்பாட்டையும் சமய உணர்வையும் பிற நல்லியல்புகளையும் மதித்துப் போற்றிய பிற்காலப் பல்லவர் தமிழ்நாட்டு வரலாற்றில் என்றென்னும் அழியாத நிலைத்த இடத்தைப் பெற்றுள்ளனர். ஆனால் அவர்களுக்குமுன் ஆண்ட அவர்கள் முன்னோர் தமிழ்நாட்டில் இருந்துகொண்டே அம் மக்கள் வாழ்வுக்கு ஒவ்வாத பலவற்றைச் செய்துவந்தமையால்தான் அவர்தம் பெயர்களைக்கூட அறிய முடியாத வகையில் மெல்ல மெல்ல ம றை ந் த ன ர் - மறைகின்றனர். பல்லவர் வரலாறு கற்றுத் தரும் இந்த நல்ல பாடத்தை அறிந்து செம்மையாக நாடாள்வார் உலகில் நல்ல சிறப்புற்றுக் கால வெள்ளங் கடந்த புகழ் பெற்று வாழ்வார். அல்லாதார்...?

பல்லவ மன்னர் தொட்ட பல பணிகள் இன்றளவும் நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளன. இனியும் தொடர்ந்து நடைபெற வாய்ப்பும் உண்டு. நாடு நாடாக வேண்டுமானால் அதனை நாடாக்கும் பொறுப்பு எக்காலத்தும் ஆள்வோரைச் சார்ந்தது என்பதை உணர்த்தும் வகையில் பல்லவர் ஆட்சி அமைந்திருந்தது. மேலும் தமிழக வரலாற்றின் பொற்காலம் எனப் போற்றப்பெறும் பிற்காலச் சோழர் காலத்துக்குப் பல வகைகளில் பல்லவர் காலம் வழிகாட்டியாக அமைந்தது. சங்க காலத்துக்குப் பிறகு உண்டான நினைக்க முடியாத பெருமாற்றத்துக்குப் பிறகு ஏழாம் நூற்றாண்டில் பிற்காலப் பல்லவர் வரலாறு ஆகிய உதய சூரியன் தோன்றியிராதிருந்தால், தமிழக வரலாறு மட்டுமன்றித் தமிழர்தம் வாழ்வு, வளன், பண்பாடு, அனைத்தும் எப்படி எப்படியோ உரு மாறி இருக்கும். பிற்காலப் பல்லவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/166&oldid=1358716" இலிருந்து மீள்விக்கப்பட்டது