பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவர்கால வரலாறு

165


நாட்டு மக்கள் உளமறிந்து, தம்மை உளத்தால் தமிழராக்கிக் கொண்டு, நமது தமிழ் நாட்டுச் சமயம், இலக்கியம், பண்பாடு இவற்றைக் காவாது அவர்தம் முன்னோர் போல வேற்று வழியில் சென்றிருப்பாரோயானால், பிற்காலச் சோழர்தம் எழுச்சிக்கும் அரசுக்கும் இடமே இருந்திருக்க முடியாது. எனவே எங்கோ சென்ற தமிழகத்தை அதன் நேரிய வழியில் திருப்பிய பெருமை பிற்காலப் பல்லவர்களுக்கும் அக்காலத்தில் வாழ்ந்த சமய, இலக்கியப் பேரறிஞர்களாகிய அப்பர், சம்பந்தர் போன்றார்க்கும் உரியதாகும். எனவே இப்பல்லவர் காலம் இத் தமிழக வரலாற்றின் ஒரு திருப்பு மையம் என்று கொள்ளலாம்.

நான் மேலே கூறிய இக்கால வரலாற்றை இந்த நூற்றாண்டின் தொடக்கம் தொடங்கி ஆய்ந்தவர் பலர். இன்று இந்த அரங்கிலேயே பல கோணங்களில் ஆய இருக்கின்ற அறிஞர்கள் பலர். எனவேதான் நான் அக்கால நிலையில் வாழ்ந்த அரசர்களையும் அவர்தம் ஆக்க அழிவுப் பணிகளையும் போர் முறைகளையும் சுட்டிக் காட்டாது, அவர்கள் சமுதாயத்தொடு கொண்ட தொடர்பின் நிலையினையும் அதன் வழி உருவாகிய பணிகளையும் என் தலைமை உரையில் சுட்டிக்காட்டினேன். இதில் கூறிய ஒரு சில முடிவுகளை நீங்கள் அப்படியே ஏற்று கொள்ளவேண்டும் என்று நான் கூறமாட்டேன். இவை பற்றிய சிந்தனைகளைக் கிளறவே இவற்றைச் சுட்டிக் காட்டினேன். அறிஞர்கள் மேலும் ஆராய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

முடிக்குமுன் இத் தொல்பொருள் ஆய்வுக் குழுவிற்கும் தமிழக அரசுக்கும் சில சொல்ல நினைக்கிறேன். கல்வெட்டுக்கள் பற்றியும் தொல் பொருள் பற்றியும் தமிழகத்தில் போருக்கு முன் நடைபெற்றது போல் மிகுந்த அளவில் தற்போது ஆய்வு நடைபெறவில்லை என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/167&oldid=1358730" இலிருந்து மீள்விக்கப்பட்டது