பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

தமிழர் வாழ்வு


நம்புகிறேன். காரணம் எதுவாயினும் இத்துறையில் கருத்திருத்தாத நிலை வருந்தத்தக்கதே. நல்ல வேளையாகத் த ற் போ து பொறுப்பேற்றுள்ள இயக்குநர் இக்குறைகள் இல்லா வகையில் பல துறைகளில் இத்தொல் பொருள் ஆய்வினை மேற்கொள்வதோடு, அவற்றைப் பொது மக்களுக்கு உணர்த்தும் வகையில் நூல்களாகவும், இத்தகைய வகுப்புகள், கருத்தரங்குகள், மாநாடுகள் வாயிலாகவும் வி ள க் கி வருகின்றனர். இத்துறையில் செய்ய வேண்டுவன பல. புகார் நகரம் இருந்தமையை நிலைநாட்டும் பல உண்மைகள் அகழ் பொருள்கள் வழியே தற்போது காட்டப்பெறுகின்றன. சற்றே ஆழ்ந்து ஆய்வு செய்யும் துறை செயலாற்றின் நாம் கனவாக எண்ணும் எத்தனையோ சங்க கால வாழ்க்கை நிலைகள் உ ண் மை க ளா க் க ப் பெறும். மொகன்ஜெதாரோ, ஹாரப்பா போன்ற நாகரிகங்கள் பண்டைத் தமிழர் நாகரிகம் அன்று என்பாரும் தென்னிந்திய நாகரிகமே பிற நாகரிகங்களுக்கு அடிப்படை இல்லை என்பாரும் வாய் மூடி மெளனியாகும் வகையில் பலப்பல பழமை பற்றிய புதிய உண்மைகள் வெளியாகலாம். அப்படிக் கால எல்லையில், நம் தமிழகத்தில் உண்டான மாறுதல்களையும் அவற்றின் வழியே கலை, நாகரிகம், பண்பாடு, சமயம், வாழ்வு இவற்றில் ஏற்பட்ட மாறுதல்களையும் திட்டவட்டமாக நிறுவ முடியும். இவற்றைக் கற்பனையாகக் கூறவில்லை. காரண அடிப்படையிலேயே கூறுகிறேன். இவ்வாறு வரலாறு காணாத கால எல்லைக்கு முற்பட்டு-இடைவிடப்பட்ட பகுதிகள் இல்லையென்னுமாறு-இன்றுவரை தெளிந்த தமிழக வரலாற்றை உருவாக்க முடியும். அந்த நிலை உருவாயின் உண்மையில் தமிழினம் உலகில் உயர்ந்த நெறிபோற்றிய-ஆக்கத் திறன் படைத்த இனம் என்பதை 'உலகோர் உணர்வர். தமிழ்நாட்டு வரலாறு. பற்றிய பல நூல்கள் தற்போது கிடைக்கவில்லை. அவற்றை மறுபடி அச்சிட்டு உலவவிட வேண்டுவது இத்துறையின் கடமை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/168&oldid=1358749" இலிருந்து மீள்விக்கப்பட்டது