பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவர்கால வரலாறு

167


யாகும். இந்த ஆக்க நிலைக்கு ஒல்லும் வகையில் செல்லும் வழியெல்லாம் செயலாற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக அரசுக்கு ஒரு வார்த்தை. எத்துணையோ திட்டங்களில் எண்ணற்ற கோடி ரூபாய்களைச் செலவிடும் அரசாங்கம் இத்துறையில் கருத்திருத்த வேண்டும். இன்று இந்தியாவிலேயே-ஏன்-உலகிலேயே தமிழினம் தனித்த சிறப்பினை உடையது என்ற பெருமைக்குத் தமிழர்தம், பழையதினும் பழையதாய்ப் புதியதினும் புதியதாய் அமைந்த சமுதாய அடிப்படையே காரணம் ஆகும். இதைக் கொண்டுதான் இன்றும் தமிழ்நாடு மொழி முதலிய வகைகளில் பிற மா நி ல ங் க ளி லி ரு ந் து வேறுபட்டு நிற்கின்றது. எனவே இவை செம்மையாக்கப்பெற வேண்டுமாயின் இவற்றுக்கு அடிப்படையான தொல்பொருள் ஆய்வில் அதிகக் கருத்திருத்த வேண்டும். இத்துறையை விரிவுபடுத்தி, பல துறைகளில் பல பலப் வகைகளில் ஆய்வினை வளர்த்து உலகுக்கு மறைந்து கிடக்கும் எண்ணற்ற உண்மைகளைப் புலப்படுத்த வேண்டும். நமது ஒருசில இலக்கியங்களைக் கண்டு வியக்கும் உலகம் உண்மையில் நம் பழமை நன்கு விளக்கப்படுமாயின் நம்மை மிகமிகப் பராரட்டும். இந்த அடிப்படையிலேதான் ஆங்கில ஆட்சிக் காலத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்ற வந்த மேல் நாட்டவர் இத்துறையில் கருத்திருத்தினர். அந்த மேலை நா ட் டு ப் பெரியவர்தம் உலையா முயற்சி இன்றேல் சிந்துவெளி நாகரிகமும் தென்னிந்திய நா க ரி க மு ம் உ ல கு க் கு த் தெரிய வழியில்லை அல்லவா? இனி இந்தப் பொறுப்பனைத்தும் தமிழக அரசினைச் சார்ந்ததாகும். ஆனால் அதற்கு ஒரு குறுக்கீடு உண்டு. என்ன? இத்துறையின் பெரும் பகுதி மத்திய அரசாங்கத்தில் இருப்பதுதான். அதனாலன்றோ பெரிய கோயில் அமைத்த இராசராசன் உருவச் சிலையைத் தமிழக அரசு விரும்பினும், அவன் அமைத்த அக்கோயிலி -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/169&oldid=1358764" இலிருந்து மீள்விக்கப்பட்டது