பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9. உலகத் தோற்றமும்
லெமூரியா நாடும்

மாண்புமிகு மொளரிசியசு நாட்டின் கல்வி அமைச்சர் அவர்களே! மாண்புடை திரு. மகாலிங்கம் அவர்களே! மற்றுமுள்ள பெரியோர்களே! வணக்கம். உலகததமிழ் மாநாட்டின் மூன்றாம் நாளாகிய இன்று தொடக்கக் கட்டத்தில் நிற்கின்றோம். ‘குமரிக்கண்டம்’ பற்றிய ஆய்வு இங்கே நடைபெறவுள்ளது. அக் குமரிக்கண்டத்தின் தோற்ற அழிவுக்கு முன் நம் உலகமும் அண்டகோளமும் அதைச் சுற்றிய பிறவும் அமைந்த நிலையின்ன இங்கே அறிஞர்தம் கட்டுரைக்குத் தோற்றுவாயாகச் சொல்லலாம் எனக் கருதுகிறேன்.

தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் இவள்
என்று பிறந்தவள் என்றுணர் ராத
இயல்பினளாம் எங்கள் தாய்

என்று இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த பாரதி நம் தாய்நாட்டின் தொன்மையை எண்ணி எக்காளமிட்டுப் பாடுகிறான். ஆம்! இப் பரந்த பாரத நாட்டின் – சிறந்த தமிழ்நாட்டின் தொன்மை அறுதியிடப் பெறாதது. இந்தக் கருத்தினையே ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் பெருமான் அழகுறக் காட்டுகின்றார்.

பஞ்சபூதச் சேர்க்கையால் ஆகியது இவ்வுலகம். விண், காற்று, நெருப்பு, நீர், மண் எனும் ஐவகையன்றி வேறெதுவும் உலகில் இல்லை. இவற்றில் ஐந்து பூதமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/171&oldid=1359100" இலிருந்து மீள்விக்கப்பட்டது