பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலகத் தோற்றமும் லமுரிெயா நாடும்

171


'இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாறே'

என்று "மைப்படிக் கண்ணாள்" எனத் தொடங்கும் தாண்டகத்தில் ஒரு நாமம் ஒருருவம் ஒன்றுமில்லா இறை நிலையின் தொன்மையினை எண்ணிப் பாராட்டுகின்றார். எனவே நம் தமிழகமும் அதைச் சார்ந்திருந்த குமரிக் கண்டமும் காலத்தால் அறுதியிட முடியாத மிகப் பழங்காலத்தில் தோன்றின என அறிதல் வேண்டும்.

இந்தப் பஞ்சபூதச் சேர்க்கையினால் உண்டான இயற்கையினை — உலக நிலையினைப் பா ர தி யா ர் 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய்' என்று பாராட்டுகிறார்.

'சித்தினை அசித்தொடு இணைத்தாய்-அதில் சேரும் ஐம்பூதத்தின் வியன் நிலை அமைத்தாய்: அத்தனை உலக்மும் வ ண் ண க் க ள ஞ் சி யம் ஆகப் பலப்பல உலகுகள் அமைத்தாய் என்று ஐம்பூதச் சேர்க்கையாலே— சித்தும் அசித்தும் சேர்ந்ததாலே உண்டான அண்ட கோளத்தினையும் உலகினையும் பாராட்டிப் பாடி, அவற்றைத் தந்த இறைவனை வணங்குகிறார். இதுபற்றி விரிவான விளக்கத்தினை என் 'வையைத் தமிழ்' நூலில் தந்துள்ளேன். (பக். 70-73)

பாரதி விண்ணை வண்ணக் களஞ்சியம் என்கின்றான்; ஆம்! சில சிவப்பு, சில நீலம், சில வெண்மை—சூரியனோ ஏழு நிறம் கொண்டவன்; இப்படி விண்மீன்களும் உலகங்களும், அண்ட கோளத்தில் உலவுகின்றனவே! இத்தகைய வண்ண உலகங்களில் சித்தினை அசித்தொடு இணைத்து—உயிரோடு உடலினை இணைத்து, பல உலகங்களில் வாழ விடுகின்றான். நம் சூரிய மண்டலத்தில் பல கோள்கள்—கோளங்கள். இன்று நாம் கண்டவை ஒன்பதோ பத்தோ! அப்படியே எத்தனையோ சூரியர்கள்!—நாம் கண்டவை, 'துவாத ஆதித்தர்'—பன்னிரண்டு சூரியர்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/173&oldid=1358782" இலிருந்து மீள்விக்கப்பட்டது