பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலகத் தோற்றமும் லெமூரியா நாடும்

173



‘அண்டைப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருங் தன்மை வளப்பருங் காட்சி
.............................
இல்நுழை கதிரின் துன் அணுப் போல
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன’

என்பன அவர்தம் திருவண்டப் பகுதியின் அடிகள். எனவே இத்தகைய விரிந்த அண்டப் பகுதியின் ஒரு சிறு துகளே நம் உலகம் – பரந்த கால எல்லையிலே இதன் வாழ்வு ஒரு நொடியே! இந்த உலகத்தில் தான் ஊழி ஊழியாகப் பலப் பல உண்டாக, அவற்றுள் ஒன்றோ சிலவோ அழிய, அழிந்த் ஒரு பகுதியே ‘குமரிக்கண்டம்’ என்ப் பெறுகிறது.

இவ்வுலகம் உண்டான கால எல்லையை உணர. முடியாது. தற்போது சில ஆய்வாளர்கள் தோற்ற எல்லையை அறுதியிடுகின்றனர். இதில் உயிரினம் தோன்றி அறுபது கோடி வருடங்கள் ஆயின என்கின்றனர். எனவே அதற்கு முன்பல கோடி ஆண்டுகள் இவ்வுலகின் ஆயுளில் கழிந்திருக்க வேண்டுமன்றோ! ஆம்! தோன்றிய நாளில் இருந்ததுபோன்ற உலகில் இன்று நாம் இல்லை. அதில் ஒரு மாற்றமே ‘குமரிக் கண்டம்’.

இவ்வுலக வாழ்விலும் அண்ட கோளப் பிறபகுதிகள் வாழ்விலும் ஐம்பூத அடிப்படையில் எண்ணற்ற ஊழிகள் தோன்றியிருக்க வேண்டும். அவற்றால் இடம் மாறிய கோளங்கள் பல – உருமாறிய உருண்டைகள் பல – மறைந்தன. பல – சிதைந்தன பல – தோன்றின பல; இப்படி அண்ட கோளத்தின் நிலத்தினை மாற்றிய ஊழிகள் – ஐம்பூத ஊழிகள் பலப்பல. இவற்றை எண்ணிப் பார்த்த பரிபாடல் ஆசிரியர் கீரந்தையார் இவற்றை இறைவன் செயலாகக் காட்டி நம்மைச் சிந்திக்க வைக்கிறார்.

‘தொல்முறை இயற்கையின் மதியொடு
...............மரபிற்றாக
பசும் பொன் உலகும் மண்ணும் யாழ்பட
விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/175&oldid=1359125" இலிருந்து மீள்விக்கப்பட்டது