பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மஞ்சு விரட்டு

17


இரண்டாவது பாடலிலே ஆயர் மகள் விரும்பிய தலைவன், ஏறுதழுவி வென்று வீரனாய் நின்ற காட்சியைத் தருகிறான். தலைவி அத்தகைய வீரனுக்கே மனைவியாவள் என்பதை,

"ஓஓ இவள், பொருபுகல் கல்லேறு கொள்பவர்
அல்லால்

திருமா மெய் தீண்டலர் என்று கருமமா
எல்லாரும் கேட்ப அறைந்தறைந்து எப்பொழுதும்,

சொல்லால் தரப்பட் டவள்"
(9-12)

என்று தோழி கூறுகிறாள்.

"சொல்லுக, பாணியே மென்றா ரறை கென்றார்—
பாரித்தார்

மாணிழை ஆறாகச் சாறு"
(13-14)

என அவர் கூறக் கேட்டுப் பின் தலைவன் சென்று, வெற்றி வாகை சூடுவதை விளக்கி, தான் கொண்ட ஏற்றை வென்று வருத்தினான் எனக் காட்டுகிறார் புலவர். பலர் அத்தொழுவில்புக இவன் வென்ற சிறப்பனை,

"மலர் மலி புகல்எழ அலர் மலி மணிபுரை
நிமிர்ந்தோள் பிணைஇ

எருத்தோடு இமிலிடைத் தோன்றினான் தோன்றி

வருத்தினான் மன்ற அவ்வேறு"
(25-27)

என்கிறார்.

பின் குரவைக் கூத்தாடியதும் மணம் நடைபெறுகிறது என்று இரண்டாவது பாட்டினை முடிக்கின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/19&oldid=1423905" இலிருந்து மீள்விக்கப்பட்டது