பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2.

எது பெண்மை ?


உலகம் தோன்றிய நாள் தொட்டே பெண்மையும் வாழ்ந்து வருகின்றது. பெண்மையும் ஆண்மையும் கலந்த ஒன்றே பேரண்டம். ஆண் முன்போ பெண் முன்போ என்பது அறுதியிட முடியாத ஆய்வாக உள்ளது. அனைத்தையும் படைத்தும் காத்தும் துடைத்தும் அருளும் இறைவனும், ஆணும்,பெண்ணும் இயைந்த இருபேருருவும் ஒருங்கமைந்த காட்சியாக வன்றோ தோற்றமளிக்கிறான். இப் பெண்மை ஓரறிவுடைய உயிர் தொடங்கி ஆறறிவுடைய மனிதன் வரையில் சிறந்துள்ளமையை ஆய்வாளர்களும் சமய நெறியாளர்களும் வற்புறுத்தி வந்துள்ளனர். ஆண்மையினும் பெண்மையே உலகை உய்விக்கும் என்ற உண்மையை திரு. ஞானசம்பந்தமூர்த்தி அடிகளார் 'ஆண் பனைகளைப் பெண் பனைகளாக்கித் தி ரு ஓ த் தூ ரி ல் விளக்கிக் காட்டினார். ஆண்பனை காய்க்காது; கனிதராது. அதனால் பயன் என்ன? எனவே அதைப் பெண் பனையாக்கிற்று அவர்தம் பழுந்த அருளுள்ளம். பனையும் பழுத்தது. பனை போன்றே பகுத்தறியக் கூடிய ஆண், பெண் வேறுபாடுகளை வேறு பிற ஓரறியுடையவற்றிலும் காண முடியும். அப்படியே படிப்படியாக ஒவ்வொரு வகையான உயிரினத்தினும் ஆண் பெண் வேறுபாட்டைக் காண்கிறோம். படைப்பின் உச்சியில்—கூர்தலறத்தின் கோடியில் உள்ள இன்றைய முன்னோடியாகிய மனிதரிடத்திலும் 'இந்த ஆண் பெண் வேறுபாட்டைக் காண்கின்றோம். இவ்வாறு தோன்றிய நாள்தொட்டு ஆண் பெண் வேறுபாடு இருப்பினும் அவை இரண்டும் இணைந்தே வாழ வேண்டிய நியதி நீக்க முடியாத வரையறுத்த ஒன்றாகிவிட்டது. அவ்வாறு ஒன்றாகா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/22&oldid=1424147" இலிருந்து மீள்விக்கப்பட்டது