பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது பெண்மை?

21


விட்டால் உலகமில்லை—உயிர் இல்லை—வாழ்வு இல்லை வேறு எதுதான் உண்டு?

வறண்ட பொல்லாத அத்தக் கொடு நிலையை உண்டாக்க இறையுள்ளம் எண்ணுமா? எ ன் று மே எண்ணாது. தான் படைத்த—கரு நலம் சான்ற உயிர்த்தோற்ற வளர்ச்சி என்றும் நடைபெற வேண்டும் என்பது இயற்கை வகுத்த நியதி. அதன் தன்மை மாறலாம்— நிலைகெடலாம் — தடுமாறலாம் —தகுதி வேறுபடலாம்—, ஆனால் அழிவு—முழு அழிவு—என்றும் எங்கும் எதற்கும் கிடையாதே!

தாவரங்கள் எப்படித் தம் இனப் பெருக்கத்தை மேற்கொள்கின்றன என்பதையும் அவற்றிற்கு உறுதுணையாகத் தோழனாகவும் பாங்கியாகவும் அமைகின்ற பிறவற்றையும் இன்றைய ஆராய்ச்சியாளர்கள் துருவித் துருவி ஆராய்கின்றார்கள். ஆணின் சேர்க்கை இன்றி, அவர்தம் கருவேற்றுப் பெண்டிர் மகப்பெறும் சிறப்பிலே, வாழக் கற்றுக்கொண்ட மக்கள், ஓரறிவுடைய உயிர்களின் பெருக்கத்துக்கும் பல வெளிப்படையான—மறைந் துள்ள—காரணங்களை ஆராய்ந்து கொண்டே வந்துள்ளார்கள். அவர்கள் ஆராய்ச்சியின் ஒரு கோடியில் தான் உள்ளார்கள் என்றாலும், அவர்கள் அதற்குள் பல உண்மைகளைக் கண்டுள்ளார்கள். பெண்மை மலர்ந்து வண்டின் ஈட்டத்தால் கருவுற்றுக் காய் தாங்கிப் பழுத்துப் பயன் தரும் வழியை உணர்கின்றார்கள். செடிகளும் கொடிகளும் மரமும் பிறவும் புல்லும் பூடும் எவ்வாறு இணைப்பாரற்றே இவ்வாறு உலகெங்கணும் வளர்ச்சி உறுகின்றன என உணர்கின்றார்கள். அவையும் நிலத்துக்கு நிலம்—இடத்துக்கு இடம்—தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ற வாழ்க்கை—இவற்றின் அடிப்படையில் அமைந்து தம்மை மற்றவர் காணா வகையில் கலந்து கருவிருந்து தன் இனத்தைப் பெருக்கி வாழ வைத்துக்கொண்டு வளரும் வரலாறு இன்னும் நன்கு ஆராயப்பெறுதல் வேண்டும்.{{Nop}}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/23&oldid=1358176" இலிருந்து மீள்விக்கப்பட்டது