பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தமிழர் வாழ்வு


ஓரறிவுடைய உயிர்மட்டுன்றிப் புழு தொடங்கிப் பறவை விலங்கு வரையில் அவையெலாம் எவ்வெவ்வாறு இணைந்து — பெண்ணும் ஆணும் கலந்து — வாழ்வை வளமாக்கி—இனப்பெருக்கம் செய்கின்றன என்பதையும் எண்ணி எண்ணிக் காண்கின்றனர் ஆய்வாளர். புழுவும் எறும்பும் தவளையும் பாம்பும் குயிலும் மயிலும் மாடும் குரங்கும் பிறவும் எவ்வெவ்வாறு தத்தம் இனத்தைப் பெருக்கிக் கொண்டு வாழ்கின்றன என்பதைக் காண்கின்றனர். இவ்வாறே மனிதக் கருவின் தோற்ற வளர்ச்சி நிலையின் பல்வேறு கூறுகளை அறிந்து ஆய்ந்து எண்ணி வியக்கின்றனர். கடவுள் நெறியைப் பாடவந்த அப்பரடிகளார் அந்த ஏழாம் நூற்றாண்டிலேயே மனிதக் கருவின் வளர்ச்சியை,

'கருவாகிக் குழம்பிருந்து கலிந்து மூளை
கருநரம்பும் வெள்ளெலும்பும் சேர்ந்தொன்றாகி
உருவாகிப் புறப்பட்டு ' (7.ம் திருமுறை)

எனப்பாடி வியக்கிறார்.

இவ்வாறு ப ல வ கை யி ல் உயிரமைப்புக்களின் வளர்ச்சியும் வளமும் உயர்ச்சியும் நலமும் ஆண் பெண் என்ற இருவேறு அமைப்புக்களாலேயே—அவை இணைந்து வாழ்வதாலேயே உண்டாகின்றன. இந்த அடிப்படை நிலையே உலகை வாழ வைக்கின்றது.

உலகம், அனைத்தையுமே - உயிரற்றவற்றையும் மறைந்துள்ளவற்றையும் - பி ற வ ற் றை யு ம் பெண்மையாகவே காண்கின்றது. பிறந்த பொன்னாட்டைத் தாய் நா டே ன் றே கூறுகின்றோம். செ ல் வ த் தை யு ம் கல்வியையும் திருமகள் கலைமகள் என்றே பெண்பால் பக்கம் நிறுத்தி ஏற்றம் தருகின்றோம். வெற்றியையும் வீரத்தையும் மகளிராகவே கண்கின்றோம். 'அஷ்ட லட்சுமி' என வடமொழிவாணர் அனைத்தையும் பெண்மையாகவே காண்கின்றனர். கடவுளின் மகனென

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/24&oldid=1358179" இலிருந்து மீள்விக்கப்பட்டது