பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது பெண்மை?

23


வந்த இயேசுவை உலகுக்கு ஈந்தவர் கண்கண்ட பெண்மை என்பதையே இயேசுவின் அடியவர் கூறுகின்றனர். காணாக் க்டவுள் - புலன் உணர்வுக்கு எட்டாத அப் பெருங்கடவுள் - காணும் தோற்றத்தில் மரியம்மையாய் நின்ற பெண்வழி அவர் மகனை உலகுக்கு அனுப்பினார் என விவிலியநூல் விளக்கிக் காட்டுகின்றது. உலகம் உய்ய அருள் நலம் பாடிய பல வடமொழித் தெய்வப் புலவர்கள் மக்களன்றி - பிற உயிர்ப் பெண்மை வழியாக வந்து சிறப்பெய்துகின்றனர். வற்றா அமுத சுரபி கொண்டு வையத்தை லாழவைததவர் 'ஆபுத்திர'னாக மணிமேகலையில் காட்சி தருகிறார். எனவே பெண்மை நலத்தை எல்லாத் துறைகளிலும் நம்மால் காண முடிகின்றது.

த மி ழ் நா ட் டி ல் மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்தும் பெண்மைக்கு அன்றும் இன்றும் ஏற்றம் தந்தே போற்றுகின்றன. உடன் கலந்து வாழும் 'மனைவி'யின் பெண்மைக்கு மதிப்புத் தராதவர்கள்கூட, உலகம் போற்றும் பெண்மை நலத்தைப் பேணிப் போற்றுவதைக் காண்கின்றோம். 'பெண்மை இன்றெல் வாழ்வில்லை' என்ற உண்மையைத்தான் இவை அனைத்தும் உணர்த்துகின்றன என்பது தெளிவன்றோ!

இத்தகைய பெண்ணினத்தை ஒதுக்கி விட்டு வாழ வேண்டும் எனச் சிலர் நினைக்கின்றன - சிலர் எழுதுகின்றனர் - சிலர் பாடுகின்றனர். அவர்கள் பெற்ற தாயை நினைக்க மறந்தவர்களே. பெண்ணைப் பெண்ணாக - பெருந் தெய்வமாக - கற்புக் கனலாக - வையத்தை வாழ வைக்கும் வைப்பாக எண்ணாத முறையே அந்த நினைவுக்குக் காரணம். பெண்ணைப் பேயாக - காமக் கூடமாக - வேறுவகையாக எண்ணுபவரே அத்தகைய கொடு நிலைக்குக் காரணமாகின்றனர். இடைக் காலத்தில் அவர்களை இழித்துரைத்தவர் எத்துணையர் - தீட்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/25&oldid=1358180" இலிருந்து மீள்விக்கப்பட்டது