பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது பெண்மை?

25


பாதிரியான 'போப்' போன்றாரையும் மகிழ்ச்சிக் கடலில் திளைக்க வைக்கவில்லையா! மறம் சாய்த்து அறம் வாழ வழிவகுத்தவர் அனைவரும் பெண்களே யன்றோ ! ஆண்டாள் போன்றார் பெண்களாகவே பிறந்து தெய்வ நெறியைப் போற்றிய நிலை நிற்க, மணிவாசகர் போன்ற ஆடவரும் தம்மைப் பெண்களாக எண்ணிப் பாடிய பாடல்கள் எதைக் காட்டுகின்றன? பெண்ணை வெறுத்தொதுக்கவா! இல்லைச் சிறக்கச் செய்யவா?

பெண் உள்ளம் இரக்க உணர்வு உடையது; பெண்களை 'மெல்லியலார்' என்றே அழைத்தனர். ஏன்? 'நல்லார்' என்ற பெயரே பெண் இனத்தைக் குறித்த ஒன்றுதானே. ஆம்! அவருள் தீயரைக் காண்பது அரிதன்றே! பின் 'தீயினில் தீயராய்' அவர்கள் காட்டப்பட்டமைக்குக் காரணம் ஆடவரன்றோ! ஆடவர் நிலை கெட்டுப் பேயாகி, காமக் களியாட்டத்தை விரும்பிய போதெல்லாம் இப் பெண்மையை வாட்டி வாட்டி, அவ்வினத்திலேயே ஒரு தனிப் பிரிவையும் தம் களியாட்டக் கொடுமைக்கு உள்ளானதாகப் பிரித்து அவல நிலையில் வைத்தவரன்றோ !

"ஆண்களெல்லாம் கற்பை விட்டு அழிவு செய்தால்

அப்பொழுது பெண்மையும் கற்பழந்தி டதோ"

என்று இந்த அவல நிலையை எண்ணித்தானே, இந்த நூற்றாண்டில் வாழ்ந்த பாரதி பாட்டிசைத்தான். அம்மம்ம! பாரதி பெண்ணின் பெருமையைப் பேசிய நிலையை எண்ண ஒருபுறம் மகிழ்வு பிறக்கின்றது. மற்றொருபுறம் அவன் சமுதாயத்தில் பெண் பெற்ற இழி நிலையைக் காட்டும்போது துன்பம் பிறக்கின்றது. அவன் புதுமைப் பெண்ணை வடித்துக் காட்டுகின்றான். அதில் பழைமையும் புதுமையும் இழைகின்றன. அவன் காட்டும் அத்தனையும் தேவைதானா என்பதற்குக் கால தேவன் விடை கூறுவான். எனினும் பெண்—தன் பெண்

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/27&oldid=1358204" இலிருந்து மீள்விக்கப்பட்டது