பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

தமிழர் வாழ்வு


தன்மை கெடாத வகையில் வாழ்வாளானால்—அவள்—தெய்வம் என்பது தேற்றம். தெய்வம் என்றால் கல்லாக்கி வழிபடுவது என்று நான் காட்டவில்லை. உலகம் அவள் உள்ளம் உணர்ந்து—தூய்மை அறிந்து—தாய்மை நிலை போற்றி—அவள் வா ழ த் தா ன் வாழ வேண்டும் என்பதையே ஈண்டு நினைவூட்ட விரும்புகின்றேன்.

இன்றைய நாகரிக உலகில், அந்த 'நாகரிகம்' என்னும் பேரால் பெண்மை, தனக்கு இழுக்கைத் தேடிக் கொள்கின்றது என்பது ஓரளவு மறைக்க முடியாத உண்மையாக உள்ளது என்பதை மறுப்பார் யார்? புறத்தோற்றங்களாலும், கோலங்களாலும் அக உணர்வையும் அக அழகையும் மண்மூடச் செய்யும் நாகரிகம் பெண்களைப் பேய்களாக்குகிறது. பெண் பெண்ணாக வாழ வேண்டுமானால் இன்றைய நாகரிக உலகில் சற்றே நின்று நினைத்துச் செ ய லா ற் ற வே ண் டு ம். இன்றைய நாகரிகம் ஆ ண் க ளை க் கு றை கூறுவதோடு பெண்களைக் குறை கூற வைக்கும் நிலையில் தான் அ ப் பெ ண் க ளை ஈர்த்துச் செல்லுகிறது. உலக நா க ரி க ங் க ள் ப ல வா க மாறிவிட்டன. நாகரிக அமைப்பு முறைகளும் அவற்றின் வழித் தோன்றிய வாழ்க்கை நிலைகளும் நாட்டுக்கு நாடு மாறுபடுகின்றதைக் காண்கிறோம். ஆயினும் பிற நாட்டு நாகரிக அமைப்பை நம் நாட்டு மங்கையர் கொள்கின்றனர் என்பதை எண்ணும்போது தடுமாற்றம்தான் , உண்டாகின்றது. மேலை நாட்டு மக்கள் பரந்த பாரதத்தை ஆண்ட நிலையில் பல உட்புகுந்தன. அவற்றுள் அவர்தம் நடையும் உடையும் நாகரிகமும், அவர்கள் நாட்டை விட்டுச் சென்ற பின்பும் நம்மை விடாமல் பற்றிக்கொண்டன. அவை தேவையா என்பதே நம் சிந்தனைக்குரியதாகும்.

உலக மகளிர் அனைவருமே உயர்ந்தோர்தாமே—யார் யாரைக் குறைகூற முடியும்? எனினும் சில நாட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/28&oldid=1358184" இலிருந்து மீள்விக்கப்பட்டது