பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது பெண்மை?

27


பழக்க வழக்கங்கள் மகளிரை மாசுள்ளவர்களாகக் காட்டுகின்றன. ஏன்?- மாற்றுகின்றன என்றும் சொல்லலாம். 'மதுவும் மங்கையும்' நிலையில் ஒன்றெனப் பேசும் நாகரிகத்தையும் கா ண் கி ன் றோ ம். 'பொன்னையும் பொருளையும் பிறவற்றையும்விட, திருடன் மங்கையின் புன்னகையை மேலாக மதிப்பான்-மதித்து அவள் விழி வழி வீழ்வான்' என்ற செகப்பிரியர் போன்ற பெரும் எழுத்தாளர்களெல்லாம் எழுதி வைத்திருப்பதைப் படிக்கின்றோம். 'நம்மையும் கள்ளும் சூதும் நான் முகன் படைத்தவாறே' என்று தமிழ்நாட்டுப் பெண் ஒருத்தி தம் இனத்தையே கள்ளொடும் சூதோடும் ஒப்பிட்டுப் பாடும் பாடல் நமக்குப் புதியதன்று. இவ்வாறே இன்னும் எத்தனையோ வகைகளில் மகளிர் நிலை கெடுவதைக் காண்கின்றோம்.

இன்று நாட்டில் புதுமை யுகம் காணும் விழைவில் பெண்கள் பூரித் தெழுந்து செயலாற்றுவதைக் காண மகிழ்ச்சியுண்டாகின்றது. இதே நிலையில் பல நூற்றாண்டுகளுக்குமுன் மக்கட் பணியே பணி என எழுந்த மணிமேகலை போன்றார்தம் செயலை எண்ணும்போது நமக்கு உண்டாகும் பெருமிதம் இன்றைய மகளிர் பணியில் உண்டாவதில்லை என்பதைக் காண வருத்தமும் உண்டாகின்றது. மகளிர் எல்லாத்துறையிலும் முன்னேற்றம் காணவேண்டியவர்களே! அவருள்ளும் ஒருசிலர் தம் பெண்மை நலம் கெடாத வகையில்-துாய்மை நலம் துளங்கா வகையில் வாழ்கின்றனர். ஆயினும் ஒரு சிலர் வாழ்வை—வறண்ட—வ ற் றி ய வாழ்வை—வாழ வேண்டாத வகையில் வாழும் வாழ்வைக் காணக் காண வருத்தமன்றி வேறு என்ன தோன்றும்!

மகளிர் பெரும்பாலும் இல்லத்துக்கு உரியவர்களாவர்—பெண்மை இல்வாழ்வை ஓம்பி அதன் வழியே வீட்டையும் நாட்டையும் ஆளவும் வாழவும் வைப்பது. இந்த அடிப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/29&oldid=1358186" இலிருந்து மீள்விக்கப்பட்டது