பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது பெண்மை?

29


வாழ்வின் அடிப்படைத் தத்துவம் அவர்தம் தூய்மை துலங்கும் சிறப்பு இவை அவருக்குப் புரியாதனவேயாம். இவற்றொடுகூட மனம் போலப் பேசும் சில ஆடவர்களுக்கு அவர்களைப் பழிப்பதும் எளிதாகிவிடுகின்றது. பெருங்காவியம் பாடுகின்ற புலவர்கள்கூட 'ஆடவரிலாமையினல்லால் பெண்களை நம்புதற்குளதோ' எனக்கூறும் அளவுக்கும் பெண்டிர் இழித்துரைக்கப்படுகின்றனர். இது சரியென்றும் நான் கொள்ள விரும்பவில்லை எனினும் இந்த நிலைக்கும் பெண்கள் தம்மைத் தாமே ஆளாக்கிக் கொள்ளக் கூடாது என்பதே என் எச்சரிக்கை. மேற்சொன்ன கருத்தை எழுதியவர் ஆடவராயினும் அந்தப் பழியை ஒரு பெண்ணின் பேரில் ஏற்றித் தாம் தப்பித்துக் கொள்ள நினைக்கிறார்.

"ஐம்புலன்களும் போல் ஐம்பெரும் பதிகள்
ஆகவும் இன்னும் வேறொருவர்
என் பேருங் கொழுகர் ஆவதற் குருகும்
இறைவனே எனது பேரிதயம்
அம்புவிதனிற் பெண் பிறந்தவர்
எவர்க்கும் ஆடவரிலாமையி னல்லால்
நம்புதற் குளதோ என்றனள் வசிட்டன

கல்லற மனைவியே அனையாள்!"

என்று பாடுகின்றவர் யார் எனத் தெரிகிறதா? ஆம்! பாரதம் பாடிய வில்லிப்புத்துாரார்தாம். அவர் மேல் தவறு இல்லை. பாஞ்சாலியைத் தமிழ்நாட்டுப் பெண் இனத்தோடு இணைத்துப் பார்க்க நினைத்தார். இத் தமிழ்நாட்டின் பெண்ணின் ஏற்றத்துக்கும் பாஞ்சாலியின் வாழ்க்கைக்கும் உள்ள இடைவெளி மிகமிகப் பெரியது. எனக் கண்டார். எனவே வாய் விட்டே பாடி விட்டார். பாஞ்சாலிக்கு ஐந்து கணவர் இருப்பினும், மேலும் அவள் ஒருவரை விரும்பினாள். இது கதை. ஆனால் இதை வைத்தே 'எந்தப் பெண்ணையும் நம்பலாகாது' என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/31&oldid=1358196" இலிருந்து மீள்விக்கப்பட்டது