பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

தமிழர் வாழ்வு


எப்படி அவர் முடிவு கட்ட முடியும்? எனினும் பாஞ்சாலி தன் உள்ளத்தால் மற்றவரைக் காண்கின்ற காரணத்தாலேயே இவ்வாறு சொல்ல முடியும் என்ற உறுதியால் இவ்வாறு அவள் மேல் ஏற்றிப் பாடி விட்டார். இன்று தவறு செய்யும் சிலர், தம் தவறு வெளிப்படாதிருக்க வேண்டி, அது பற்றியே பிரசாரம் செய்து கொண்டிருப்பதைக் காணவில்லையா! இந்த நிலையில் பாஞ்சாலியை வைத்து, தமிழ்க் கவிஞர் வில்லிப்புத்துாரர் இந்தக் கவிதையைப் பாடிவிட்டார். ஆயினும் அவள் ஏற்றத்தைக் குறைக்காத வகையில் பாட்டின் இறுதியில் 'வசிட்டன் நல்லற மனைவியே அனையாள்' என்று பாராட்டியுள்ளார். ஆயினும் அதே வேளையில் உலகப் பெண்ணினத்துக்கு—சிறப்பாகப் பாரதத் தமிழ்ப் பெண் இனத்துக்கு நான் சொல்ல விரும்புவது இத்தகைய பேச்சுக்கும் ஏச்சுக்கும் அவர்கள் இட்ங் கொடுக்காத வகையில் நடந்துகொள்வது சிறப்புடைத்து என்பதுதான்.

இன்றும் சில நாடுகளில் வாழ்வில் முரண்பட்டவர்கள் வாழலாம். அவர்தம் நாட்டு வாழ்க்கை முறையும் நாகரிகமும் அத்தகையன. அப்படியே மணமும் விலக்கும் நிமிடத்துக்கு நிமிடம் நடக்கலாம். அது அவ்வந்நாட்டு பண்பாடு என் அவர்கள் கூறிக்கொண்டிருக்கலாம். ஆனால் நம் நாட்டுப் பெண்மைக்கு நாம் காணும் பொருள் — உரை — உயர்வு — உணர்வு — உறவு — பண்பு அனைத்தும் வேறுபட்டவை. அவை காலம் மாறினும் மாறாதவை. ஒரு பிறப்பில் மட்டுமன்றி எத்தனை எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இணைந்து வாழத்தக்கவை. அப் பெண்மை அன்பு—காதல் வாழ்வு—தாய்மைப் பேறு வழிவழியாக எத்தனையோ பிறவிகளில் பற்றி வருவது. இதைத்தான் தமிழ்ப் பேரறிஞர் வள்ளுவர்,

'இம்மைப் பிறப்பில் பிரியலன் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/32&oldid=1358198" இலிருந்து மீள்விக்கப்பட்டது