பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது பெண்மை?

31


என்று காட்டுகின்றார். தமிழகப் பெண்மை வாழ்வு தலையாயது. உயர்ந்து—உலகம் உள்ளளவும் ஓம்பப்பெற வேண்டுவது.

பெண்ணினத்தில் மற்றொரு வகை மாறுபாட்டையும் நான் அடிக்கடி எண்ணுவது உண்டு. வடநாட்டுப் பெண்மையிடத்தும் தமிழ்நாட்டுப் பெண்மையிடத்தும் அதற்கென ஒவ்வொரு சான்றினையும் நினைத்துப் பார்ப்பதுண்டு. அந்த வாழ்வு சிறந்ததா? என அடிக்கடி எனக்குள் நானே கேள்வி கேட்டுக்கொள்வேன். பெரும்பாலும் முடிவு காண முடியாத ஒன்றே என நான் நினைப்பதுண்டு. ஆயினும் ஒருசில உலக நிகழ்ச்சிகளினிடை 'அது'வும் உண்டு என உணர்வதும் உண்டு. ஆயினும் அந்நிலை சரியா தப்பா என என்னால் இன்றும் முடிவு கட்ட முடியவில்லை. சரியாயின் வள்ளுவர் தம் 'தெய்வந் தோழாள் கொழுநற் றொழு தெழுவாள்; பெய்யெனப் பெய்யும் மழை' என்ற குறளுக்கு என்ன பொருள் கொள்வது என்ற தடுமாற்றம் உண்டாகின்றது தப்பாயின் ஞானசம்பந்தர் போன்ற தெய்வ நெறிப் பாட்டிசைத்த புலவர்களும் பிறரும் போற்றும் நிலையை அவர்கள் பெற முடியுமா என்ற ஐயம் உண்டாகின்றது. எனவே இதற்கு விடை காண்பது அரிதுதான் போலும்.

கொண்ட கணவனொடு சிறிதும் கலக்காது இருந்தாள் புனிதவதியார் என்றுகூற முடியாது. அவர்தம் வாழ்வு காதல் கனித்த இல்லற வாழவாகத்தான் விளங்கி வந்திருக்கின்றது. உள்ளம் பொருந்தாவிடினும், உடல் ஒன்றிய வாழ்வு அவர்களுக்கு இல்லை என்று சொல்ல மு டி யா து. அ த் த கை ய இ ல் ல ற வா ழ் வி ல் இயைந்த ஒரு பெண் கணவனைத் தவிர்த்து வேறு தெய்வத்தை வணங்கினாள் என்பது ஏற்க முடியாததுதான். இங்கே நான் தெய்வமாக வணங்கினாள்-அல்லது-வணங்கவில்லை என்று கூறும்போது கல்லில் கடவுளாக்கிப் புறத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/33&oldid=1358202" இலிருந்து மீள்விக்கப்பட்டது