பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

தமிழர் வாழ்வு


தொழுக்கம் மாறுபடும் நிலையைக் கூறவில்லை. உண்மையிலே அவர் நம்பித்தான் வாழ்கின்றார். அந்த வாழ்வின் தொடக்கில் கணவன் மனைவி இருவரும் எல்லா இன்பத்தையும் பெற்றே வாழ்கின்றனர். பின் அவர் எப்படி கணவனைத் துறந்து கடவுள் நெறிபற்றி எலும்புருவாகி ஏற்றமுற்றார்? இது புரியாத புதிர் அல்லவா! சேக்கிழார் அதற்கு ஏதோ ஒரு காரணம் காட்டுவர். இளமையிலே 'வண்டல் புனைவன வெல்லாம் வளர்மதியம் புனைந்த சடை அண்டபிரான் திருவார்த்தை அணையவருவன பயின்று' அந்த அம்மையார் வாழ்ந்தார் என்பார். அப்படியாயின் அவர் ஏன் மணத்துக்கு இசைந்தார்? ஆண்டாளைப் போன்றல்லவா மறுத்து 'மானுடவர்க்கு வாழ்க்கைப் படேன்' என்று கூறி உயர்வு பெற்றிருக்க வேண்டும். இதற்குக் காரணம் காட்டா நிலையினைத் தான் 'முன்னை ஊழ்' என்கிறார்கள் போலும். காரைக்காலம்மையாருக்கு 'நேற்று முன்னாளில்' வந்த உறவாகப் பரமதத்தன் கழிய 'மிக நெடும் பண்டைக் காலமுதல் நேர்ந்து வந்த உறவு' பரமசிவன் உறவாக அமைந்துவிட்டமைக்கு முன்னைய ஊழே காரணமாக அமையும் போலும். விடைகாண முடியாத புதிர் பெண்மை நலத்தை ஏதோ செய்கிறது.

திருவிளையாடல் புராணத்தில் வரும் கெளரியின் கதையும் இத்தகையதே. சைவனுக்கு மகளாகப் பிறந்து வைணவனுக்கு வாழ்க்கைப் பட்ட கெளரி இல்லறத்தில் தன் கணவனொடு இணைந்து வாழ்ந்தாரா என்பதைத் திட்டமாகச் சொல்ல முடியவில்லை. காரைக்காலம்மையாரைப் போன்று அ வ ர் க ள் த னி யா க இல்லற வாழ்வில் வாழவில்லை என்பது தேற்றமாயினும் கணவனும் மனைவியும் என்ற உண்மை மறுக்க முடியாதது. அவர் இறைவனிடத்து நீங்காப் பற்றுடையவராகி அவராலேயே ஆட்கொள்ளப்பெற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/34&oldid=1358203" இலிருந்து மீள்விக்கப்பட்டது