பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

தமிழர் வாழ்வு


சமுதாயம் வேறு பெண்ணினம் வேறு எனப் பிரிக்க முடியாத போதிலும், அனைத்திலும் நானே வல்லவன் என மார் தட்டும் ஆணினத்துக்குமுன் பெண்ணினம் பயனற்றது என்று எண்ணுவாரும் உண்டே என நினைக்கும்போது நெஞ்சம் நெகிழ்கின்றதாகையால் அப் பெண்ணினம் சமுதாய வாழ்வை எவ்வெவ்வாறு வளமாக்கிற்று - வளமாக்குகிறது - வளமாக்கும் என்பதை இனித் தொடர்ந்து காண்போம்.

பெண்மைக்குரியனவாக நம்மவர் நான்கு குணங்களைத் தொகுத்துக் காட்டியுள்ளனர். 'நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு' என்ற நான்குமே அவை. அவற்றிற்குப் பிற்காலத்தவர் தந்தம் மனம்போல் பொருள் கொண்டார்கள் என்றாலும் இவற்றின் உண்மைப் பொருள்கள் இன்னும் நாட்டில் உலர்ந்து போகவில்லை நாணுதற்கு நாணக் கடமைப்பட்டவர் மனிதர். அதில் தலை நின்றவர் மங்கையர்.

'கருமத்தால் நாணுதல் நாணு'

என வள்ளுவர் காட்டும் உண்மை எத்தகையது! தலை கவிழ்ந்து நிலைகுலைந்து எல்லாவற்றையும் அடக்கிக் கிடப்பதன்றே நாணம் என எண்ணுவார் சிலர். அப்படியாயின் கண்ணகி அடங்காப் பிடாரியா? அவள் அடங்கியிருந்தால் என்னவாயிருக்கும்? இன்றளவும் உலகம் கோவலனைத் தி ரு ட னா க அல்லவா மதிப்பீட்டுக் கொண்டிருக்கும். அவளுடைய சீற்றமன்றோ, உலகுக்கு அறிவுச் சுடரைக் கொளுத்திற்று. அவள் நாணமற்றவளா? தீமை செய்யவன்றோ நாணவேண்டும்?

மடம் என்னும் சொல்லுக்குக் 'கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை' எனப் பொருள் கொண்டனர். இது எவ்வளவு மடமை. பழம்பெரும் உரையாசிரியர்கள், 'அறிந்தும் அறியாது போன்றிருத்தலே மடம்' என விளக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/38&oldid=1358238" இலிருந்து மீள்விக்கப்பட்டது