பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3.

எது பண் ?



(22.12.83 அன்று தமிழிசைச் சங்கப் பண்ணாராய்ச்சிக் கூட்டத்தில் நிகழ்த்திய தொடக்கவுரை)

தமிழ்இசைச் சங்கத் தலைவர் அவர்களே! செட்டி நாட்டு அரசர் அவர்களே! செயலாளர் அவர்களே! மற்றுள்ள ஆட்சிக்குழு உறுப்பினர்களே! விழாத் தலைவர் அவர்களே! ஓதுவா மூர்த்திகளாக உள்ள பெரியோர்களே! இசைவாணர்களே! இசையிலும் அதன் இன்ப உணர்விலும் தம்மை மறந்து நிற்கும் பெரியோர்களே! தாய்மார்களே! அனைவருக்கும் என் அன்பு கலந்த வணக்கம்.

இதோ, இன்று, நாம் இங்கே நம் தமிழ் இசைச் சங்கத்தின் நாற்பத்து ஒன்றாம் ஆண்டு விழாவின் இடையில் நடைபெறும் பண் ஆராய்ச்சிக் கூட்டத்தின் தொடக்கத்தில் நிற்கின்றோம். இந்த இனிய ஆராய்ச்சியினைத் தொடங்கி வைக்க என்னைப் பணித்த அனைவருக்கும் என் தலை தாழ்ந்த வணக்கத்தினையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் இசைச் சங்கத்தோடு ஆரம்ப முதலே தொடர்புடையவன் நான். ஆண்டு விழாக்களில் தொண்டனாக—ஆய்வாளனாக—பிற பணியாளனாகக் கலந்து மகிழ்ந்தவன் நான். இத்தகைய பண் ஆராய்ச்சிக் கூட்டங்களில் கலந்து கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டு, உள்ளம் மகிழ்ந்து, இதன் வளர்ச்சியைப் போற்றியவன் நான்—இன்றும் போற்றிக்கொண்டுதான் இருக்கிறேன். எனினும் சில ஆண்டுகளாக 'ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்' என்ற நிலையில் நான் எங்கும் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/46&oldid=1358274" இலிருந்து மீள்விக்கப்பட்டது