பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது பண்?

45


கொள்ளாது, எல்லாவற்றையும் விட்டு, எங்கோ ஒதுங்கி நின்று, ஒல்லும் வகையால் தனித்த முறையில் என் பணியினைச் செய்து கொண்டிருக்கிறேன். இத்தகைய ஒதுக்கத்தில் வாழும் என்னை, இத் தமிழ் இசைச் சங்க நிருவாகக் குழுவினர் ஒருமுகமாக 'வருக' என அன்பு கலந்த ஆணையிட்டனர். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்! எனவே அவர்தம் அன்புக் கட்டளையினையேற்று, உங்கள்முன் இப் பண் ஆராய்ச்சியினைத் தொடங்கி வைக்கும் பணிவழியே நிற்கின்றேன். மறுபடியும் அனைவருக்கும் வணக்கம் செலுத்தி என் கடமையினைத் தொடங்குகிறேன்.

தலைவர்களை நினைக்கின்றேன்

இங்கே நிற்கும்போது என் எண்ணம், இத் தமிழ், இசைச் சங்கம் தோன்றிய நாள்முதல் கடந்தகால நிகழ்ச்சிகளையெல்லாம் கணக்கிட்டுச் செல்லுகின்றது. தமிழ் நலம் காக்க நின்ற செட்டிநாட்டு அரசர் அண்ணாமலையார் அவர்கள் இதை முன்னின்று தோற்றுவித்த நிலையினையும், அ வ ரு ட ன் தலைவர்களாக இருந்த கோவை திரு. இரத்தினசபாபதி முதலியார், திரு. ஆர்.கே சண்முகம் செட்டியார், திவான் பகதூர் திரு. டி.எம். நாராயணசாமி பிள்ளை ஆகியோர் ஆற்றிய நெடும் பணிகளையும் நெடிது நினைத்து நிற்கின்றேன். அவர்கள் அனைவரையும் நன்கு அறிந்தவன் நான். அப்படியே இன்று தமிழ் நலம் காக்கும்—உள்ளத்தால் தமிழினைப் போற்றும், தமிழ் இலக்கியத்தில் தோய்ந்து திளைக்கும் உயர்நீதிமன்ற நடுவர் மாண்புமிகு திரு. பு.ரா. கோகுல கிருஷ்ணன் அவர்கள் சென்ற ஆண்டு முதல் தலைமைப் பொறுப்பேற்று இதனை வளர்த்து வரும் சிறப்பினையும், அண்ணாமலை அரசரின் இரு கண்களாகத் திகழும் அவர்கள்தம் மக்கள் இருவரும் இதன் வளர்ச்சியினையே வாழ்வின் வளர்ச்சி எனக் கருதி அல்லும் பகலும் அயராது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/47&oldid=1358276" இலிருந்து மீள்விக்கப்பட்டது