பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

தமிழர் வாழ்வு


தொண்டாற்றும் நிலையினையும் எண்ணிப் போற்றுகின்றேன். அத்தகைய நல்லவர்தம் விழைவின்படி, அவர்கள் வாழ்த்த, உங்கள் முன் என் கடமையினைச் செய்ய நினைக்கின்றேன்.

சொல்லும் பொருளும்

பாட்டு வெறும் பொழுது போக்குக்காக மட்டும் பாடப் பெறுவதன்று; அது உள்ளத்தைத் தொட்டு, உயிரை வளர்த்து, உயர் நிலைக்கு அதை ஏற்றிச் செல்வதாகும். அப்படியாயின் அதன் பொருளழப் பாடுபவரும் கேட்பவரும் உணர வேண்டுமல்லவா! பொருளை உணர்ந்தால்தானே அதில் ஈடுபட்டுத் தம்மை மறந்து, உயிர் உணர்வு பெறுகின்றநிலை தோன்றும் தம்மை மறந்து இறைவனைப் பாடிய மாணிக்கவாசகர் 'சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் என்கிறார். தொடர்ந்து 'சிவபுரத்து உள்ளார் திருவடிக்கீழ் பல்லோரும் ஏத்தப் பணிந்து செல்வர்' எனத் தம் முதல் அகவலை முடிகின்றார். 'செல்வர்' என்ற சொல்லொடு நிறுத்தி, பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுபவர். இவ்வுலகில் அருட் செல்வராக—பொருட் செல்வராக—செல்வத்தின் செல்வம் பெற்றவராக வாழ்வார் என்று கொள்ளலாமல்லவா! பின் பல்லோரும் ஏத்தத் தம் பணியே அணியாகக் கொண்டு, 'சிவபுரத்தின் உள்ளார். திருவடிக் கீழ்ச் செல்வர்' எனப் பொருள் கொள்ளலும் சரலுமன்றோ! எனவே சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொன்னால்—கேட்டால் இம்மையில் செல்வராக இருப்பத்தோடு, மறுமையிலும் இறைவன் அருளாகிய பெருஞ் செல்வத்தையும் பெற முடியும் என்பது தெளிவு. பெரியோர்களே! இந்த வகையில் இன்றைய தமிழக மேடைகளில் பாட்டுகள் பாடப்பெறுகின்றனவா? பாடுபவருக்கும் கேட்பவருக்கும் சொல், பொருள், இரண்டுமன்றி, அந்த மொழியும் தெரியாத வகையில்தானே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/48&oldid=1358280" இலிருந்து மீள்விக்கப்பட்டது