பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது பண்?

47



'கச்சேரிகள்' நடைபெற்று வருகின்றன. இந்த அவல நிலையினை நீக்குவதே பணியெனக்கொண்டு வாழ்வனவே தமிழ் இசைச் சங்கமும் பண் ஆராய்ச்சியும். இவை நன்கு சிறந்து, நாட்டு மக்களை இருவகைச் செல்வங்களையும் பெற ஆற்றுப்படுத்தி ஓங்குக என வாழ்த்தி மேலே செல்லுகின்றேன்.

'பண்' என்றபோதே உளம் நெகிழ்கின்றது; உவகையால் களி துளும்புகிறது. நா அதன் தன்மையினை—திறத்தினை—வாழ்வளிக்கும் தன்மையினைப் போற்றுகிறது. உடல் அதன் வழியே உற்று நின்று தன்னிலை அறியா வகையில் த டு மா று கி ன் ற து. இவ்வாறு மூன்றினையும் பற்றி ஈர்க்கும் பண், பண்டு தொட்டு, ஏன்?—மக்களின்பம் மலர்ந்த நாள் தொட்டு—இல்லை—உயிரினம் தோன்றிய நாள் முதல் உலகில் உலா வருகின்றது. உயிர்களை வாழ்விக்கின்றது—வளமாக்குகின்றது—வளர்க்கின்றது. ஆம், மரம் தன் அசைவிலே—இணைப்பிலே இசை பாடுகிறது; அலை பாடிப் பாடி. 'தரங்கம்பாடி யாயிற்று; பறவைகளின் இசை எல்லா நாடுகளிலும் பாராட்டப் பெறுகின்றது. எ ல் லா ம் பாடுகின்றன—பரவுகின்றன—பாராட்டைப் பெறுகின்றன. ஆனால்—மனிதன் மட்டும் எங்கோ சென்று கொண்டிருக்கின்றான்.

பண்ணும் இசையும்

பண் என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உள்ளன. ஒருசிலவற்றை இங்கே எண்ணல் ஏற்புடைத்தாகும். 'பண்' என்பதற்கு இசைப்பாட்டு, வீணை, தகுதி (Fitness, adaptation, good quality, Suitableness) அசைவு, தொண்டு (Service), காலம் என்ற பொருள்களும் இன்னும் வேறு பொருள்களும் உள்ளன. இவற்றையெல்லாம் கண்டு எழுதியவன் தமிழன் என்று எண்ணல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/49&oldid=1358282" இலிருந்து மீள்விக்கப்பட்டது