பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

தமிழர் வாழ்வு


வேண்டா; தமிழ்நாட்டில் தயாரான எந்த அகராதியும் இத்துணைப் பொருள்களைத் தரவில்லை. எங்கோ இருந்து வந்த 'வின்ஸ்லோ' என்ற அறிஞன் தமிழ் கண்டு, அதன் சொல்வளத்தையும், பொருள் நலத்தையும் உணர்ந்து எழுதி வைத்து அன்று (1862-இல்) வெளியிட்டுச் சென்றுவிட்டான். அதன் படிகள் கிடைக்காத போதும், அதன் மறுபதிப்பைக் கொணரத் தமிழ்நாட்டில் 'நாதி' இல்லை. எங்கோ வடநாட்டில் தில்லியில் வெளியிட அது இன்று நம் கையில் திகழ்கின்றது. அவரே இப் பண் என்ற சொல் பற்றிக் குறிக்கும்போது, இது நால்வகைப் பண்களை விளக்குவதையும் பகல் பண் ஒன்பது (9), இராப் பண் ஒன்பது (9), பொதுப் பண் மூன்று (3) ஆக இருபத்தொரு ப ண் க ளை விளக்குவதையும் சுட்டியுள்ளார். அவர் கேட்டறிந்த நிலையில் தந்த விளக்கம் இவை. 'பண்பு' என்ற சொல்லும் இதனடியாகப் பிறந்த் ஒன்று எனக் கொள்ளுமாறு, அ த ற் கு ள் ள பல பொருள்களை விளக்குவதோடு, தகைமை (good quality, fitness, Suitability) என்று முன் கண்ட பண் என்ற சொல்லுக்குச் சமைந்த பொருள்களையும் வரிசையிட்டுக்காட்டியுள்ளார். (பக்கங்கள் 721—722—1976 ப தி ப் பு. —National Educational Service, Delhi) அப்படியே இச்சொல்லின் அடிப்படையாகப் பிறந்த பண்ணானவன் (a man of good manners or habits) பண்படுதல் (being made fit or suitable) பண்ணை (helping serviee)—திருந்துதல் உதவல் என்ற பிற சொற்களின் பொருள்களையும் காட்டி விளக்குகிறார். அவ்வாறே அப் பண் அடிப்படையில் பிறந்த பாண் 'பாண்மகள்', 'பாண் மகன்' முதலியவற்றையும் தொட்டுக் காட்டுகிறார். இந்த அகராதி அடிப்படையிலும் பின் வளர்ந்த நிலையிலும் தற்கால 'லெக்சிகன்' என்னும் பேரகராதி, 'பண்', 'இசை' என்ற இரண்டினுக்கும் ஓரளவு விளக்கம் தந்துள்ளது என ஈண்டுச் சுட்டக் கடமைப்பட்டுள்ளேன். எனவே, 'பண்', 'பயன்' என்ற சொற்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/50&oldid=1358009" இலிருந்து மீள்விக்கப்பட்டது