பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது பண்?

49


உயிரினத்தினை அழகுபடுத்த, மக்களுக்குத் தொண்டாற்ற, புதுப்புது வாழ்க்கை நெறிகளைந் தோற்றுவிக்க, அணி அணியாகச் செறிவுள்ளதாக்க, தன்னடக்கம் பெற (decoration, service, creation, ornament) வழி காட்டுவன என உணர்தல் வேண்டும். எனவே, உயிரினம் வளரவும் வாழவும் பயன்படுத்துவது இந்தப் பண் என்ற ஒன்றேயாகும். அப் பண்ணே இசையாக பாட்டொடு கலந்ததாகப் பரிணமித்து உலகில் உலவுகின்ற நிலையிலே தான் நம் பண்கள் பலப்பல வகையில் பலப்பல முறையில்—பலப்பல அமைப்பில்—பலப்பல பெயர்களில் விரிந்து நிற்கின்றன.

பண்

பண் வாழ்வை ஒழுங்குபடுத்துவது; நேரிய வழியில் செலுத்துவது. எ ன வே, அதன் வழி வாழ்பவர் பண்பட்டவர் அல்லது பண்பாளர் எனப் பெறுவர். ஒழுங்காகச் செல்லும் ஆடு மாடுகளின் கூட்டத்துக்கே 'பண்ணை' என்று பெயர். 'ஆட்டுப் பண்ணை, 'மாட்டுப் பண்ணை' என்பன உலகறிந்த வழக்குகள். அவை மட்டுமன்றி ஒழுங்காகப் பண்படுத்தப்பட்டு விளையும் நிலங்களும் பண்னை எனப் பெற்று, அவற்றை உடையவனையும் 'பண்ணையார்' ஆக்குகின்றது. 'பண்' என்பது இசையில் மட்டுமன்றி, சமூகத்தில்—நேரிய வாழ்வில்—செம்மை நெறியில் நிலைத்து நிற்கும் ஒன்றாகும்.

இவ்வாறே 'இசை' என்ற சொல் பற்றியும் இத்தமிழ் இசைச் சங்கத்தில் நிற்கும் நாம் எண்ணக் கடமைப்பட்டிருக்கிறோம். இச் சொல்லுக்கும் வின்ஸ்லோ அகராதியும் சென்னை 'லெக்சிகனும்' நல்ல விளக்கங்கள் தருகின்றன. 'வின்ஸ்லோ' (பக்கம் 81) மிக விளக்கமாகப் பல்வேறு வகைப்பட்ட இசை வேறுபாடுகளையும் குரல், துத்தம், கைக்கிளை போன்றவற்றையும் தெளிவுபடுத்தி, அவற்றின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/51&oldid=1357979" இலிருந்து மீள்விக்கப்பட்டது